
எனக்கு வராது!
உனக்கு வராது!!
என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு,
ஆண்டிகளையும் தாக்குகிறது.
ஆள்வோரையும் அதிகார வர்க்கத்தையும், ஆன்மீக வாதிகளையும் தாக்குகிறது.
குப்பன் சுப்பன் என எவரும் தப்பவில்லை. போகும் வேகம் பீதியளிக்கிறது. எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும். ஆகையால்,
- மாதம் ஒரு முறை மளிகை வாங்குவது நல்லது.
- வாரம் ஒரு முறை காய்கறி வாங்குவது நல்லது.
- மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும்.
- மளிகை காய்கறி பைகளை வெளியேவே வைக்கவும்.
- பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும்.
- வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும்.
- கை,கால், முகத்தை சோப்பு போட்டு அடிக்கடி கழுவவும்.
- பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும். ( லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும்.)
- இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்.
- வெளியே சென்று வந்ததும் வெளி பாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும்.
சோபா, சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம். - ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அதன்பின் புதிய மாஸ்க் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டு பணியாட்கள் பயன்படுத்தும் மாஸ்க் புதியதுதானா? என கவனியுங்கள்.
- சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான்.
- கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்
- மாஸ்க், கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே கழட்டி போட வேண்டாம்.
- வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி ஆடைகள் அணிய வேண்டாம். சேலை கட்டும் பெண்கள் கவனம்.வீதியில் கிடக்கும் கொரானாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டாம்.
- எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும்.
- ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும்.
- வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம்.
- தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும்.
- வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய செய்து பணிசெய்ய சொல்லவும். இதில் தயவு தாட்சண்யம் வேண்டாம். - உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். அருகில் உள்ள வீடு, நண்பர் வீடு, நண்பர்கள் என நெருங்கி பழக வேண்டாம். அவர்கள் எங்கே சென்று வருகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாது. தொற்று பரவுவதில் இதுபோன்ற செயல்கள் அதிக இடம் பிடிக்கிறது.ஆகவே இதிலும் தயவு தாட்சண்யம் வேண்டாம்.
- கபசுர குடிநீர் அவ்வப்போது 30-60 மில்லி குடிக்கலாம்.
இனியாவது திருந்துவோம்!
கொரோனா கற்றுத்தந்த பாடம்!!
கொரோனா வந்தால் எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?
- ஏதேனும் ஒரு கசாயம் (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும் குடிக்கவும்
- தினம் ஒரு சூப் முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி சூப், ஆட்டுக்கால், சிக்கன், மட்டன், சூப் குடிக்கவும். காசு? வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
- சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
- பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, யோகா செய்யவும். நேரமில்லை என எண்ணாமல் கிடைக்கும் இடைவெளிகளில் செய்யலாம்.
27. பல குடும்பங்கள் கொரோனா பாதிப்பினால் உறவுகளை விட்டு பிரிந்து அரசின் சிகிச்சை முறை நடவடிக்கைளால் மன உளச்சலுக்கு உள்ளாகின்றனர். பண விரயம் ஒருபுறம். இதை மனதில் கொள்ளவும்.
கருத்துக்களில் குறை இருந்தால் தவிர்த்து விடுங்கள். நிறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி : WhatsApp-ல் பகிரப்பட்டது
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now