• December 4, 2024

என்ன சொல்றீங்க பூமியை விட்டு நிலவு விலகுதா? – அய்யய்யோ இனி என்ன ஆகும்..

 என்ன சொல்றீங்க பூமியை விட்டு நிலவு விலகுதா? – அய்யய்யோ இனி என்ன ஆகும்..

Moon

நிலவெங்கே போனாலும் முன்னாள் வராதா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட நிலவானது தற்போது பூமியை விட்டு 3.78 சென்டிமீட்டர் என்ற அளவில் விலகிச் சென்று கொண்டிருக்க கூடிய உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இப்படி பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? அதனால் என்னென்ன ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Moon
Moon

பூமியிலிருந்து பல்வேறு வகையான விண்கலன்களை நிலாவில் தரை இறக்கி இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் அதன் லூனா மற்றும் அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது.

அந்த சமயத்தில் விண்வெளி வீரர்கள் அங்கு ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retro reflector) என்ற கண்ணாடி பொருளை பொருத்தினார்கள். இதன் மூலம் பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவை அளந்தார்கள்.

இதற்காக நிலவில் லேசர் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்ட பிறகு பூமியில் இருந்து துடிப்பான லேசர் ஒலிக்கட்டையை நிலவை நோக்கி அனுப்புவார்கள். இந்த லேசர் ஒலிக்கற்றை நிலவில் பிரதிபலிப்பானில் பட்டு பிரதிபலித்து மீண்டும் பூமியை நோக்கி திரும்பி விடும்.

Moon
Moon

இதை வைத்துக்கொண்டு பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல எடுத்துக்கொண்ட நேரம், அங்கிருந்து திரும்பி வர எடுத்துக் கொண்ட நேரம் இவை இரண்டையும் வைத்து ஒளி பூமியில் இருந்து சென்று திரும்ப எவ்வளவு நேரம் ஆனது என்பதை கணிக்க முடியும்.

அந்த அடிப்படையில் தான் பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக கணக்கிட்டார்கள். நிலவானது பூமியை நீள்பட்ட பாதையில் சுற்றி வரும் போது இரண்டுக்கும் இடையே ஆன தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

அதன் அடிப்படையில் அதிகபட்ச தொலைவில் இருக்கும் போது இரண்டுக்கும் இடையே 407,731 கிலோமீட்டர் தூரம் அதாவது குறைந்தபட்ச தொலைவில் இரண்டுக்கும் இடையே 364,397 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையிலான சராசரி தொலைவானது 384,748 கிலோமீட்டர் ஆகும்.

Moon
Moon

இதனைக் கொண்டு மேற்கூறிய லேசர் ஒளிக்கற்றையை தினமும் நிலவுக்கும் அனுப்பி அதன் தொலைவை கணக்கிட்டு கொண்டே வந்தார். நிலவுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவு குறித்த தகவல்கள் கிடைக்கும்.

பல ஆண்டுகளாக சேகரித்த எந்த தகவல்களைக் கொண்டு அதன் சராசரியை கணக்கிடும்போது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு மாறி வருகிறதா? இல்லையா? என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம். அதன் அடிப்படையில் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் தற்போது மாறிக்கொண்டு வருவது உறுதியாக உள்ளது.