• November 14, 2024

 யார் இந்த களப்பிரர்கள்? இவர்கள் ஆட்சிகள் தமிழகம் எப்படி இருந்தது..

  யார் இந்த களப்பிரர்கள்? இவர்கள் ஆட்சிகள் தமிழகம் எப்படி இருந்தது..

Kalabhra

பௌத்த சமயத்தை சேர்ந்த களப்பிரர்கள் வைதீகத்தை எதிர்க்க உருவானவர்கள் என்று கூறலாம். எனினும் ஒரு சில வைதீகச் சமயங்களை இவர்கள் எதிர்க்கவில்லை என சில முரண்பட்ட கருத்து வேற்றுமைகளை வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைத்து இருக்கிறார்கள்.

இந்த களப்பிரர்கள் கிபி 300 முதல் 600 ஆண்டுகள் வரை ஆண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த காலத்தை இருண்ட காலம் என்று அழைக்க காரணம் இவர்கள் பற்றிய எந்த விதமான சான்றுகளும் தடயங்களும் கிடைக்காமல் இருப்பது தான்.

Kalabhra
Kalabhra

தென்னிந்தியாவை ஆண்ட இவர்கள் பிற்காலத்தில் தமிழகத்தில் தஞ்சாவூரை ஒட்டி இருந்த பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர்களின் கல்வெட்டில் கள்வன் என்று குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் தான் முத்தரையர்கள் என்று சில கூறுகிறார்கள்.

கள்வர் இனத்தைச் சேர்ந்த இவர்களைத்தான் களப்பிரர்கள் என அழைத்ததாக கூறி வருகிறார்கள். கர்நாடகாவில் கிடைக்கப்பெற்ற சில கல்வெட்டுகளில் கலிக்குலன், கலிதேவன் போன்ற பெயர் குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. எனவே இவர்களுக்கும் களப்பிரர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.

இந்த களப்பிரர்கள் கோசரங்கள் வழி வந்தவர்கள் என்றும் உழவு தொழிலிலை பார்த்தவர்கள் என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது. பெரிய புராணத்திலும் களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

Kalabhra
Kalabhra

கருநாடக வடுகர் எனும் சமண சமயத்தை சேர்ந்தவர்கள் தான் இவர்கள் என கூறி இருக்கிறார்கள். திருஞானசம்பந்தர் சமணர்களோடு போராடி வென்ற போது சமண சமயத்தவர்களை சேர்ந்தவர்கள் தான் இவர்கள் என்பதை உறுதி செய்கிறது.

களப்பிரர்கள் வரலாறு பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள விரிவான சான்றுகள் ஏதுமில்லை. இவர்களது தோற்றம் ஆண்ட பகுதிகள் தமிழகத்தின் மீது படை எடுத்த காலம் போரில் கிடைத்த வெற்றி தோல்வி பற்றி இதுவரை எந்தவிதமான உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை.

Kalabhra
Kalabhra

எனினும் இவர்கள் ஒரு 300 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. இதை அடுத்துதான் இவர்கள் சமண சமயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலை புரிந்து உள்ளது.

இதனை அடுத்து பாண்டியர்கள் களப்பிரர்களை ஒடுக்கி மீண்டும் ஆட்சி அமைத்தார்கள் என தெரியவந்துள்ளது. எனவே உங்களுக்கும் களப்பிரர்கள் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.