• November 8, 2024

“அதிகமாக கோபம் வேண்டாம்..!” – கோபப்பட்டா குண்டாவிங்க..

 “அதிகமாக கோபம் வேண்டாம்..!” – கோபப்பட்டா குண்டாவிங்க..

angry

இன்று கோபம் என்பது மக்களுக்கு இடையே தோன்றும் ஒரு கடுமையான அடக்க முடியாத உணர்ச்சி ஆகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக மாறலாம். 

எனவே கோபம் ஏற்படும் போது உடல் அளவில் அதிக ரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நார் அட்ரினலின் நோரட்ரினலின் அதிகம் சுரக்கலாம். 

அதே போல் கோபத்தை மூன்று விதமாக பிரித்துள்ளார்கள். அது அறிவை பாதிக்கக்கூடியது மட்டும் அல்ல உடலை பாதிக்கக்கூடியது.மேலும் நடத்தையை பாதிக்கக்கூடியது.

angry
angry

நீங்கள் காரமான உணவுகளை உட்கொள்ளும்போது மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உணரப்படும்.

 மேலும் காரமான உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால் இது கோபத்தை தூண்டும் என்று கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கூறியிருக்கிறார்கள். 

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “ஆத்திரம் அழிவைத் தரும்”, என்பது போன்ற பழமொழிகளை வைத்தே கோபப்படுவதால் நமக்கு ஏற்படும் சிக்கல்களை புரிந்துகொள்ளலாம். நீங்கள் அதிகமாக கோபப்படுவதால் மாரடைப்பு, இதய நோய்கள் உண்டாகும் என்று கூறுகிறார்கள். 

இது மட்டுமல்ல அதிகமாக கோபப்படுவதால் உடல் எடை கூடும். உடலின் எடை கூடிவிட்டால் அந்த எடையை குறைப்பது மிகவும் சிரமம் என்றும் கூறுகிறார்கள். நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டுமென்றால் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

angry
angry

எனவே நீங்கள் கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால கோபம் மற்றொன்று நீண்ட காலத்துக்கு பொதுவாக கோபம் என பிரித்து கட்டுப்படுத்த வேண்டும். மனிதர்களின் சிந்தனைகளின் வெளிப்பாடு தான் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் மூலம் ஆத்திரமூட்டும் நிலையில் இருக்கும்.

அதில் நீங்கள் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.அதை பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் கோபம் உண்டாகும்.

இந்த கோபத்தை குறைப்பதற்கான 15 வழிகள் உள்ளது. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்.

எதிலும் அவசரம் ஒரு போதும் வேண்டாம். நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.நீங்கள் செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

 கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள். மத சம்பந்தமான பிடித்தமான வரிகளை மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

angry
angry

நீங்கள் ஆழமான பெருமூச்சு விடுங்கள். எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து 1 முதல் 100 வரை எண்களை எண்ணிடுங்கள். மேலும் வாக்கிங் செல்லுங்கள். 

கோபம் வருகிறது என்று தெரிந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். முகத்தை கழுவுங்கள் அல்லது சுகமான குளியல் போடுங்கள். எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்துக்கு வாருங்கள் ஓய்வெடுக்கலாம் அல்லது குட்டித் தூக்கம் போட்டால் உங்களுக்கு கோபம் குறையும்.

கோபத்தை உண்டு பண்ணும் இழப்புகளில் இருந்து திரும்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கோபத்தையும் முற்றிலும் தவிர்த்தால் உங்களுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக பேணப்படும்.