
சர்வதேச சந்தையில் தங்கம்: வரலாறு காணாத உச்சம்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி காரணமாகத் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை 38% வரை குறையலாம் என வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டது கடந்த சில நாட்களாகவே டிரெண்டாகி வரும் சூழலில், இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் எளிமையான விளக்கத்தை அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரியை அறிவித்தார். இதனால் ஒரு பக்கம் சர்வதேச பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், தங்கம் விலை பறந்து உச்சம் தொட்டது. சர்வதேச சந்தை முதல் இந்தியச் சந்தை வரை வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை வர்த்தகமானது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
நேற்றைய தினம் மட்டும் சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு சவரனுக்கு 1280 ரூபாய் குறைவு பதிவானது. தற்போதைய விலை விவரம்:
- 22 கேரட் தங்கம் ஒரு கிராம்: ₹8,400
- ஒரு சவரன் தங்கம் (8 கிராம்): ₹67,200
இந்த விலை குறைவு தற்காலிகமானதா அல்லது தொடர்ந்து குறையுமா என்பது பலருக்கும் எழும் கேள்வி.
தங்கம் விலை 38% குறையும் கருத்து: உண்மை என்ன?
மார்னிங் ஸ்டார் செய்தி நிறுவனத்தின் நிதி ஆய்வாளர் ஸ்டூவர்ட் என்பவர் தங்கம் விலை 38% வரை சரியலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இதுபோன்ற கணிப்புகள் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowவரலாற்றில் தங்கம் விலை – பெரும் சரிவுகள்
ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “இதற்கு முன்பு தங்கம் விலை இந்தளவுக்குச் சரிந்து இருக்கிறதா என்றால்… ஆம், விழுந்து இருக்கிறது. 1980ம் ஆண்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது 800 டாலராக இருந்த தங்கம் விலை 200 டாலராக சரிந்தது. இது 75% சரிவு என்பது குறிப்பிடத்தக்கது,” என்கிறார்.
1980களின் பொருளாதார சூழல்
அந்த காலகட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநராக பாவ் வாக்கர் என்பவர் இருந்தார். அவர் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை 20% ஆக உயர்த்தினார். இது அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளியது. அப்போது பணவீக்கம் உச்சத்தில் இருந்ததால் அந்த நடவடிக்கை தேவைப்பட்டது.

இன்றைய நிலைமை – தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது?
ஆனந்த் சீனிவாசனின் கருத்துப்படி, “இப்போது பணவீக்கம் முழுமையாகக் குறைவதற்கு முன்பே அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாலேயே தங்கம் விலை அதிகரிக்கிறது. வட்டி விகிதம் குறைவது தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது.”
புவிசார் அரசியலின் தாக்கம்
நிதி ஆய்வாளர் ஸ்டூவர்ட் மற்றொரு காரணத்தையும் சுட்டிக்காட்டுகிறார். “புவிசார் அரசில் பதற்றம் காரணமாகவே மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குகிறார்கள். புவிசார் அரசில் பதற்றம் சீரடைந்தால் தங்கம் விலை குறையும்” என்கிறார் அவர்.
மூன்று தலைவர்கள்: உலக அரசியலின் அச்சாணிகள்
ஆனந்த் சீனிவாசன் மேலும் கூறுகையில், “புவிசார் அரசில் பிரச்சினை முடிவுக்கு வர டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் ஆகியோர் மாற வேண்டும். தற்போதைய சூழலில் டிரம்ப் மாற வாய்ப்பில்லை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் தான் அமெரிக்க அதிபராக இருப்பார்.”
அமெரிக்காவின் உள்நிலை குறித்து அவர் சொல்லும்போது, “அதன் பிறகும் வே.டி. வான்ஸ் போன்ற நபர் அதிபரானால் நிலைமை மேலும் மோசமாகும். அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பலவீனமாகவே இருக்கிறது” என்றார்.

“மற்றொருபுறம் புதின் மற்றும் ஜி ஜின்பிங் கூட கிட்டதட்ட மன்னராட்சி போலத் தான் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் இருக்கும் வரை புவிசார் அரசியல் பதற்றம் முடியாது” என்ற கருத்தை அவர் தெரிவிக்கிறார்.
தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் நாடுகள்
“ஏற்கனவே சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கைவசம் இருக்கும் டாலரை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்” என்று குறிப்பிடும் ஆனந்த் சீனிவாசன், “டிரம்ப் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்த பிறகு சீனா தங்கம் வாங்குவதை அதிகரிக்கவே செய்யும் என நினைக்கிறேன்” என்றார்.
இப்போது 38% விலை குறைவு சாத்தியமா?
ஆனந்த் சீனிவாசன் தெளிவாக கூறுகிறார், “இப்போது இந்த சூழல் இல்லை.. அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால், வரலாம். ஆனால் அப்போது நமக்கு முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துவிடும்.”
எவ்வளவு குறையும்?
ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “அமெரிக்கா வட்டி விகிதத்தை அதிகரித்தால் மட்டுமே இதுபோல (பெரிய சரிவு) நடக்கும். ஆனால், அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகமாக உயர்த்தினால் இந்திய ரூபாய் அழுத்தத்தில் வரும்.”

“இங்கிருக்கும் அந்நிய முதலீடுகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எல்லா டாலரும் அமெரிக்காவுக்குப் போய்விடும். ரூபாய் மதிப்பும் சரியும். எனவே, ரூபாய் மதிப்பில் சரிந்தாலும் 10 முதல் 12% மட்டுமே தங்கம் விலை சரியும். ஆனால், அப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாகக் கணிக்கவே முடியாது” என்று கூறினார்.
முதலீட்டாளர்களுக்கான அறிவுரை
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தை நிலவரங்களை கவனமாக ஆராய வேண்டும். விலை ஏற்றத்தில் மட்டுமே முதலீட்டு முடிவுகளை எடுப்பது ஆபத்தானது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
சர்வதேச தங்கம் சந்தை போக்குகள்
சர்வதேச அளவில் தங்கம் விலையானது பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் வலிமை, புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை முக்கிய காரணிகளாகும்.
2025-ன் முதல் காலாண்டில், உலக அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக, தங்கம் விலை 38% குறைவது நிகழ்காலத்தில் சாத்தியமில்லை என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்து. இருப்பினும், 10 முதல் 12% வரை குறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம்.

முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். சந்தை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம்.
இந்தக் கட்டுரை ஒரு செய்தி மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரை அணுகவும்.