• March 19, 2024

ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?

 ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?

முதல் பார்வையில், ஒரு தங்கும் விடுதி/ ஹோட்டலில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்துவது சற்றே அபத்தமானதாகத் தோன்றலாம், காரணம் வெள்ளை நிற துணியில் மற்ற எந்த நிற துணியை விட எளிதாக கறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


1990 க்கு முன்பு வரை பெரும்பாலும் ஹோட்டல்களில் வண்ணமயமான விரிப்புகள் தான் பயன்படுத்தப்பட்டன; கறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அது எளிதாக மறைத்துவிடும்.

https://images.app.goo.gl/9rwnxQ6LKLqGnSdS9

1990 இல், வெஸ்டின் ஹோட்டல்கள் (Westin Hotels) வெள்ளை நிற துணிகளை பிரபலப்படுத்தியது. அவர்கள் சுத்தமான மற்றும் புதிய துணியை தான் மக்கள் விரும்புவதை ஆய்வு மூலமாக கண்டுபிடித்தனர்.


வெள்ளைநிற படுக்கையானது அறையில் ஒரு “ஒளிவட்டம்” (halo) தோன்றும் பாதிப்பை உருவாக்கி, ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களை, தங்களுடைய அறையை புதியதாகவும் சுத்தமாகவும் இருப்பதாக உணர வைத்தது.

அத்துடன் வெள்ளை பெட் ஷீட் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன:

  • அவை அதிகபட்ச சுத்தமாக இருப்பதால், ஹோட்டல் சாதாரணமாக இருந்தாலும் ஆடம்பர உணர்வைத் தருகின்றன.
  • மிகவும் மோசமாக அழுக்கடைந்து அடையாளம் தெரியாதபடி கறை படிந்தால் கூட வெள்ளை நிற விரிப்புகளை வெளுப்பது எளிதானது. (வண்ண விரிப்பு ப்ளீச் செய்யப்பட்டால் திட்டு திட்டாக மாறலாம்).
  • அனைத்து அழுக்கு துணிகளையும் (துண்டு/விரிப்பு/தலையனை உறை) வேறு எந்த நிறமும் ஒட்டிக்கொள்ளும் என்று கவலைப்படாமல் துவைக்கலாம்.
  • வெள்ளை நிறத்தின் காரணமாக, ஹோட்டல் ஊழியர்கள் அழுக்கு துணியை எளிதாக கண்டறியலாம்
  • வெள்ளை நிறம் நிறைவான உணர்வைத் தருகிறது மேலும் முழு வெள்ளை நிறத்திலான விரிப்பில் தூங்குவது நன்றாக/ சுகமானதாக இருக்கும்.