“ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை..!” – எறியாமல் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்கள்..

curry leaves
உணவின் மனத்திற்காக பயன்படக்கூடிய இந்த கருவேப்பிலை மணமூட்டியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரித்து ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்தை தரக்கூடிய அற்புத அருமருந்து என கூட கூறலாம்.
வேப்பிலைக்கு எந்த அளவு மருத்துவ குணம் உள்ளதோ அதைவிட பல மடங்கு அதிக அளவு மருத்துவ பயன்பாட்டைக் கொண்டதுதான் இந்த கருவேப்பிலை.

உங்கள் மேனியை இரும்பாக மாற்றக்கூடிய இந்த கருவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. நீங்கள் என்ன கருவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதின் மூலம் பல பலன்கள் கிடைக்கிறது.
குறிப்பாக வளர இளம் பெண்கள் கறிவேப்பிலையை தினமும் காலை 10 இலைகள் உண்பதின் மூலம் அவர்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் கிடைப்பதன் காரணத்தால் அந்த குறைபாடு எளிதில் மருந்துகளை உட்கொள்ளாமலேயே நிவாரணம் கிடைக்கிறது.
தற்போது அதிகளவு அதிகரித்து இருக்கின்ற உடல் பருமன் பிரச்சனையோடு, அடிவயிற்று தொப்பையை குறைப்பதில் இந்த கருவேப்பிலைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று கூறலாம். கருவேப்பிலையை அதிகமாக ஆண்களும், பெண்களும் ஜூஸ் ஆக அடித்துக் குடிப்பதின் மூலம் தொப்பை பிரச்சனையில் இருந்து விடுதலை அடைய முடியும்.

உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை குறைக்க கூடிய தன்மை கொண்ட கருவேப்பிலையை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் போது இதய சம்பந்தமான நோய்கள் கொழுப்பு கட்டி போன்றவற்றை எளிதில் நீக்க முடியும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று நினைப்பவர்கள், கருவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வர சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு ரத்தசோகை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கருவேப்பிலை ஜூஸ் உதவி செய்கிறது.

செரிமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கருவேப்பிலை சளி தொல்லைக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. எனவே கருவேப்பிலையை உணவில் இருந்து ஒதுக்கி வைக்காமல் அதை உண்ணக்கூடிய பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.
நீளமான முடியை விரும்பக் கூடிய பெண்கள் கருவேப்பிலையில் செய்த எண்ணெய் மற்றும் உணவு பண்டங்களை தவறாமல் உண்ணும் போது முடி நன்கு வளர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் முடி கொட்டுவதும் தடுக்கப்படுகிறது.
எனவே இனிமேல் உங்கள் வீட்டில் கருவேப்பிலையின் பயன்பாட்டை அதிகரிங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.