“அழிவின் விளிம்பில் இருக்கும் புதர் தவளை..!” – கேரளா, மூணாறில் கண்டுபிடிப்பு..
இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எண்ணற்ற உயிரினங்கள் இந்த உலகில் வாழ்ந்து வந்துள்ளது. சில காலகட்டத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணங்களால் பல வகையான உயிரினங்கள் இந்த மண்ணில் நிலைத்து நிற்காமல் அழிந்துள்ள விஷயம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அந்த வகையில் தற்போது அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் புதர் தவளை என்று அழைக்கப்படுகின்ற “உத்தமன்ஸ் ரிட் புஷ்” எனும் தவளை இனமானது தற்போது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்ற இது போன்ற தவளை இனமானது தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. கேரளாவில் இருக்கின்ற கோழிக்கோடு, காக்கயம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த தவளையை முதன்முதலாக வனத்துறையைச் சார்ந்த பாதுகாவலர் உத்தமன் கண்டறிந்து இருக்கிறார்.
இதனை அடுத்து இவரது பெயரை முதலில் தாங்கிய வண்ணம் “உத்தமன்ஸ் ரீட் புஷ்” என்று இந்த தவளைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த தவளையின் உருவ அமைப்பை பொறுத்தவரையில் 1 அங்குலம் நீளமும், 10 கிராம் எடையும் கொண்டுள்ளது.
அரிய வகையைச் சேர்ந்த இந்த தவளை இனமானது மலைகளில் நீர் நிறைந்த இடங்களில் மூங்கில் மற்றும் நாணல் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் வாழும் தன்மையை கொண்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த தவளை மூணார் அருகே இருக்கும் லட்சுமி எஸ்டேட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு சிறிதாக காட்சியளிக்க கூடிய எந்த தவளை இனம் பாதுகாக்கப்படக்கூடிய இனங்களில் ஒன்று என்பதால் இந்த இனத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை அரசு எடுத்து மேலும் தவளை இனத்தின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
அப்படி செய்யக்கூடிய பட்சத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த உயிரினத்தை அழிவிலிருந்து நம்மால் காப்பாற்ற முடியும். எனவே வனத்துறை தக்க நடவடிக்கை எடுத்து இந்த உயிரினங்கள் வசிக்கும் பகுதியை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பற்றிய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றைப் பற்றி எங்களோடு தாராளமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.