பொதுமக்கள் சிரிக்க தடை விதித்த Strict-ஆன அரசு !!!
வடகொரியாவில் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும், மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். இந்த செய்தி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
1994ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வடகொரியா நாட்டை ஆட்சி செய்து வந்த கிம் ஜாங் உன்-ன் தந்தையும் முன்னாள் ஆட்சியாளரும் ஆன கிம் ஜாங் இல்லின் 10வது ஆண்டு நினைவு நாளை குறிக்கும் வகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
ரேடியோ Free Asia கொடுத்த தகவலின்படி, போதுமான அளவு வருத்தமாக இல்லாதவர்களை கண்காணிக்குமாறு வட கொரிய அரசாங்கம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாம். டிசம்பர் 17 முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னரே டிசம்பர் முதல் நாளிலிருந்து வடகொரியா நாடு முழுவதும் கூட்டு துக்க உணர்வு அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டு துக்கத்தின் மனநிலையை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை ஒரு மாத சிறப்பு பணியில் ஈடுபடுவார்கள். அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட இந்த துக்கத்தை அனுசரிக்காதவர்கள் கருத்தியல் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் மது அருந்திவிட்டு கொண்டாட்டம் அல்லது போதுமான வருத்தம் இல்லை என பிடிபட்ட பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி கைது செய்யப்படுபட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த துக்க காலத்தில் வடகொரியாவில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டால் கூட சத்தமாக அழக் கூடாது எனவும், துக்க காலம் முடிந்த பிறகே உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கடுமையான அறிவுறுத்தல் வந்துள்ளதாக அந்நாட்டில் இருந்து கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சுனாமியை முன்கூட்டியே கணித்த பண்டைத் தமிழர்கள்!
- இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரப்பெண் – கடலூரின் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் வாழ்க்கை வரலாறு தெரியுமா?
- மதுரை மீனாட்சி கோவிலின் மறைந்திருந்த வரலாறு: 400 கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் அதிரடி தகவல்கள் என்ன?
- உலகின் மிகவும் பிரபலமான பானம் காபி: நீங்கள் அறியாத அதிசயங்கள் என்னென்ன?
- உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?
வடகொரியாவில் சர்வாதிகாரம் எந்த அளவிற்கு தலை ஓங்கி இருக்கிறது என்பதற்கு இந்த துக்க அனுசரிப்பு சட்டம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த துக்க அனுசரிப்பு சட்டத்தை எதிர்த்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மனிதர்களின் உணர்ச்சிகள் கூட எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு அரசு தீர்மானிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என உலக நாடுகள் இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.