“அழுத்தத்தை குறைக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன்..!” – இந்த உணவுகளை அதற்கு சாப்பிட்டாலே போதும்..
இன்று இருக்கின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு நேர் மாறாக அவன் பணி புரியக்கூடிய இடத்திலும், வீட்டிலும் ஏற்படுகின்ற ஒரு வித அழுத்தத்தினால் மிக விரைவிலேயே மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இயங்கக்கூடிய இவர்கள் கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியம் இல்லாமல் பணத்தைத் தேடி அலைவதால் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய ஹார்மோன்களை எளிதில் நமக்கு தரும் உணவுப் பொருட்கள் பற்றிய விஷயங்கள் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தத்தை நீக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருக்க வைக்க டோபமைன் என்று அழைக்கப்படக்கூடிய ஹார்மோன் உதவி செய்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்ககூடிய மகிழ்ச்சியான ஹார்மோன் என்று கூறலாம்.
சரி அப்படி என்றால் இந்த ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கிறதா அல்லது இதனை வேறு ஏதேனும் பொருட்களில் இருந்து நாம் பெற வேண்டுமா? என்று நீங்கள் யோசிப்பது மிக நன்றாக தெரிகிறது. அந்த வகையில் நீங்கள் எந்த ஹார்மோனை அதிக அளவு பெறுவதற்கு சில உணவுப் பொருட்களை உட்கொண்டாலே போதுமானது.
அதற்கான உணவுப் பொருட்கள் என்ன அதை எப்படி உண்ண வேண்டும் என்பதை இனி பார்க்கலாம். அந்த வரிசையில் முதலாவதாக வருவது அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட் தான். இந்த டார்க் சாக்லேட்டை நீங்கள் அதிக அளவு சாப்பிடும் போது உங்கள் மனதில் இருக்கும் அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி ஹார்மோன் தூண்டப்படுகிறது. இதனால் உங்கள் மன அழுத்தம் எளிதில் குறையும் என கூறலாம்.
இதற்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடியது கொட்டை வகைகளான நட்ஸ். நீங்கள் உங்கள் உணவில் உங்கள் மனநிலையை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைத்துக்கொள்ள நட்ஸ்சை சாப்பிட்டாலே போதும்.
மேலும் உணவில் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் ஆரோக்கியம் அடைவதோடு மட்டுமல்லாமல், மகிழ்ச்சி ஹார்மோனை நீங்கள் அதிக அளவு பெறுவதின் மூலம் உங்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியில் இருக்கும் என்று கூறலாம்.
குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு சக்தி உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த ஆரஞ்சு பழம் மன அழுத்தத்தை குறைத்து விட உங்களுக்கு உதவி செய்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை தடுக்கக்கூடிய ஹார்மோனை உற்பத்தி செய்கிற பணியில் உறுதுணையாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கக்கூடிய பெர்ரிகளை நீங்கள் அதிகளவு உண்ணும் போது உங்கள் உடலில் டோபமைன் அளவு அதிகரித்து உங்கள் மனநிலை மேம்படும் என்பதில் எந்த அளவும் சந்தேகமும் இல்லை.
உங்கள் உணவு முறையில் தினமும் இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சேர்த்துக் கொள்வதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து எளிதில் வெளிவந்து விடலாம். இதற்கு என மருத்துவமனை நோக்கியோ மாத்திரைகளை போடுவதோ தேவையில்லை.