• November 8, 2024

“பழங்காலத்தில் நேரத்தை கணித்த எகிப்தில் எப்படி கணித்தார்கள்..!” – மிரள வைக்கும் உண்மைகள்..

 “பழங்காலத்தில் நேரத்தை கணித்த எகிப்தில் எப்படி கணித்தார்கள்..!” – மிரள வைக்கும் உண்மைகள்..

time

மனித நாகரீகம் தோன்றிய சமயத்தில் அவர்கள் நேரத்தை கணக்கிட்டு இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அது உண்மை அல்ல.  உலகில் முதல் எழுத்து தோன்றியதோ அதற்கு முன்பே மனிதன் காலத்தை கணிக்க ஆரம்பித்து விட்டான்.

எனவே தான் எப்போது இந்த காலத்தை பற்றி அவன் அறிந்து கொண்டான் என்ற தகவல்களை அறிந்து கொள்வது, தற்போது வரை மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது.

time
time

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு வகைகளில் காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் வானில் தோன்றும் சூரியனின் நகர்வை பற்றி மற்றும் சந்திரனின் நகர்வுகளைக் கொண்டு இவர்கள் காலத்தை கணித்திருக்கலாம்.

எகிப்தில் எகிப்திய ஹைரோகிளிஃபிக் நூல்கள் ஒரு மணி நேரம் என்பதன் தோற்றம் பற்றி புதிய தகவல்களை நமக்கு அளித்துள்ளது. மேலும் வட ஆப்பிரிக்கா மற்றும் அருகில் உள்ள கிழக்குப் பகுதிகளில் இவை தோன்றி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

நேரம் நிமித்தமாக எகிப்தில் உள்ள தண்டேரா கோவிலில் உள்ள மேற்கூறையில் வானியல் தொடர்பான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்று உள்ளது.

time
time

கிமு 2400 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் பிரமிடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் தான் அவை. இவற்றில் வன்வ்ட் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இந்தச் சொல்லை வெனுட் என்று உச்சரிக்க முடியும். இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த சொல்லானது ஒரு நட்சத்திரத்தை குறிக்கிறது. அது மட்டும் அல்லாமல் இரவு நேரத்தோடு தொடர்புடைய ஒரு மணி நேரத்தை குறிக்கக்கூடிய சொல்லாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சொல்லைப் பற்றி புரிந்து கொள்ள நாம் அசைவுக் என்ற நகருக்கு சென்றால் அங்கு இருக்கும் பழங்கால செவ்வக வடிவ மரமூடிகளின் உட்புறத்தில் இரண்டாயிரத்தில் அலங்கரிக்கப்பட்ட வானியல் அட்டவணை உள்ளது.

அந்த அட்டவணையின் மூலம் நாம் பத்து நாட்கள் கொண்டது. ஒரு வாரம் எனவும் 12 மாதங்கள் அவற்றில் இருந்தது என்றும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் 10 நாட்களைக் கொண்ட வாரங்களாகவும் இறுதியில் ஐந்து நாட்கள் விழாக்காலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

time
time

மேலும் அட்டவணையின் ஒவ்வொரு காலத்தில் 12 நட்சத்திரங்களும், அவற்றுக்குரிய பெயர்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதோடு இந்த நட்சத்திரங்கள் இரவு நேரத்தில் 12 பகுதிகளாக அதாவது பணி ரெண்டு மணி நேரமாக பிரிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

பகலில் 12 மணி நேரமும், இரவில் 12 மணி நேரமும் இருந்தால் அவை 24 மணி நேரா நாளாக அவர்கள் குறிப்பிடவில்லை. பகல் நேரம் சூரியன் நகர்வதால் ஏற்படும் நிலை மாற்றங்களைக் கொண்டே இவர்கள் நேரத்தை குறித்து இருக்கிறார்கள்.

இப்போது எகிப்தியர்கள் எப்படி நேரத்தை கணித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் என்று நினைக்கிறோம்.