“சமணத்துக்கு பை.. பை.. சொல்லி சைவத்துக்கு மாறிய கூன் பாண்டியன்..!” – என்ன நடந்தது?

Koon Pandiyan
ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட இவரது உண்மையான பெயர் ஹரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆகும். வளைந்த முதுகினை கொண்டு இருந்த காரணத்தினால் இவரை அனைவரும் கூன் பாண்டியன் என்ற பெயரில் அழைத்து வந்தார்கள்.
சமணர்களின் ஆதிக்கம் அதிக அளவு இருந்த சமயத்தில் சைவம் மதுரையில் தலைத்தொங்க பக்க பலமாக இருந்த மன்னன் கூன் பாண்டியன். இவரது ஆட்சிக் காலத்தில் மதுரை நகரின் வரலாற்றில் மிகச் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டது.
மதுரை மக்கள் சிறப்பாக வாழ்வாங்கு வாழக்கூடிய வகையில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் மத்தியில் கூன் பாண்டியனுக்கு ஒரு மிக சிறப்பான இடம் உள்ளது.

ஆரம்ப நாட்களில் கூன் பாண்டியன் சைவ மதத்தை விடுத்து சமண மதத்தை தழுவியதின் காரணத்தால் அங்கு வாழ்ந்த மக்களும் சமண சமயத்தை தழுவி இருந்தார்கள்.
ஆனால் பட்டத்தரசி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சரையாரும் சைவ சமயத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததால் பல பிரச்சனைகள் எழுந்தது.
இந்நிலையில் சைவ சமயத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தருக்கும், சமண மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.
அதுவும் சங்கம் வளர்த்த மதுரையில் பாண்டிய மன்னர்களையே சமணர் ஆக்கிவிட்ட மமதை தலைக்கேறிய சமயத்தில் சைவ சமயத்தை சார்ந்தவர்களை நேரில் பார்த்தாலே தீட்டு என்று உதாசீனம் செய்யப்பட்ட நேரத்தில் திருஞானசம்பந்தரை மதுரைக்கு ராணி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதனை அடுத்து திருஞானசம்பந்தர் மதுரை வந்த பிறகு இரு சமயத்தினருக்கும் இடையே புனல் வாதம் ஏற்பட்டது. புனல் வாதம் என்பது இரண்டு சமய உண்மைகளை பற்றி ஏற்றில் எழுதி அதை ஆற்றில் விட வேண்டும்.
அப்படி விடும்போது வெள்ளத்தில் எதிர் திசையில் எது செல்கிறதோ அந்த ஏட்டைக் கொண்டவர்கள் வெற்றி கொண்டவராக கருதப்படுவார்.
அந்த வகையில் சமணர்கள் சமஸ்கிருத வார்த்தைகளை எழுதி ஆற்றல் விட்டபோது அது ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு கலந்து விட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இதை ஏற்றுக் கொள்ளாத சமணர்கள் ஞானசம்பந்தரிடம் அவரது ஏட்டினை விடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து திருஞானசம்பந்தர் வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை பாடி அருளி அதனை தம் திருக் கையாலேயே வைகை ஆற்றில் இட வைகைப் பெருவெள்ளத்தை கிழித்து எதிர் திசை நோக்கி வந்தது.

மேலும் திருஞானசம்பந்த மதுரை வந்ததை அறிந்து கொண்டு அவர் தங்க இருந்த மடத்தில் சமணர்கள் தீயிட்டு கொளுத்தினார்கள். மடம் தீப்பிடித்து எரிவதை பார்த்து துளியும் பதறாத திருஞானசம்பந்த ஒரு பதிகம் பாடி அந்த தீயை அப்படியே அணைத்து விட்டார். எனினும் எந்த நெருப்பானது கூன் பாண்டியனுக்கு வெப்பு நோயை ஏற்படுத்தியது.
கடுமையான இந்த வெப்பு நோய் காரணமாக பாண்டியன் அணிந்திருந்த ஆபரணங்கள் உருகி உடல் வெப்பத்தால் வெந்து துடித்தான். இதனை அடுத்து சமணர்கள் மயில் பீலியால் தங்களுடைய தவ வலிமையை பயன்படுத்தி மன்னரின் உடல் முழுவதும் தடவி வெப்பத்தை தணிக்க முயன்றார்கள்.
ஆனால் அவ்வளவும் தோல்வியில் முடிந்தது. கடைசியாக திருஞானசம்பந்த தங்கி இருந்த மடத்திற்கு தீ வைத்ததால் தான் இந்த தீமை நிகழ்ந்துள்ளது என்பதை உணர்ந்த அவர் தன் வெப்பு நோயை போக்கிவிட்டால் சமணத்தை ஒழித்து விட்டு சைவத்துக்கு மாறுவேன் என்று கூறுகிறார்.

இதனை எடுத்து தனது கடுமையான வெட்பு நோயை திருஞானசம்பந்தரின் விபூதி தீர்த்த காரணத்தால் சமணத்தை விடுத்து சைவத்துக்கு மாறிய மன்னருக்கு மேலும் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. இத்தனை நாள் கூன் முதுகோடு உலா வந்த கூன் பாண்டியனின் முதுகு நிமிர்ந்து சாதாரணமாக தோன்றினார்.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னனின் கூன் பாண்டியன் என்ற பெயரானது சுந்தரபாண்டியன் என மாறியதோடு மட்டுமல்லாமல் சமணத்தை விடுத்து சைவத்தை தழுவினார். இதன் மூலம் மதுரையில் சமணர்களின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டு சைவ மரபானது பின்பற்றப்பட்டு தலை தொங்க வழி செய்தது.