“இனி வேண்டவே வேண்டாம்..!” – இரவு விளக்குகள் (Night Lamp) போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்..
இரவில் நீங்கள் உறங்கும் போது உங்கள் வீட்டில் நைட் லேம்ப் என்று அழைக்கப்படும் இரவு விளக்குகளை பயன்படுத்துவீர்களா?. அப்படி நீங்கள் அந்த இரவு விளக்கை பயன்படுத்துவதால் உடலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதுமட்டுமல்ல நீங்கள் இரவில் அதிக நேரம் முகநூல், வாட்ஸ்அப் என இணையதளத்தில் உங்கள் நேரத்தை கடத்துபவர்களாக இருக்கும்போது உங்களுக்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
அந்த ஆபத்து என்ன அதிலிருந்து உங்களை எப்படி தற்பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றிய பதிவைத்தான் இந்தக் கட்டுரையில் படிக்கப் போகிறீர்கள்.
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய சொத்து என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். கடவுளின் அற்புத படைப்பான இந்த உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்குபடுத்தக்கூடிய உயிரியல் நேர முறைமை (Biological clock system) பற்றி நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உயிரியல் நேர முறைமையை சரியான விதத்தில் செயல்படுத்தக்கூடிய சுரப்பி ஒன்று நமது தலையில் உள்ளது. இதன் பெயர் தான் பீனியல் சுரப்பி.
பார்ப்பதற்கு சிறிய கடலை உருண்டை வடிவில் இருக்கக்கூடிய இந்த சுரப்பியானது நமது பார்வை நரம்புகளோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுரப்பியானது, ஒவ்வொரு நாளும் ஒரு அறிய பொருளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரப்பதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமாக உள்ளது.
அட அது அப்படி என்ன ஒரு பொருளை சுரக்கின்றது என்பதை பற்றி நீங்கள் மனதுக்குள் யோசிக்கவே வேண்டாம். அது தான் மெலடோனின்(Melatonin).
இந்த அதிசயமான வேதியல் பொருள் சுரக்க வேண்டுமென்றால் கட்டாயம் இரவில் நீங்கள் இருள் சூழ்ந்த பகுதிகள்தான் படுத்து உறங்க வேண்டும். ஏனெனில் இந்த இருளில் தான் இந்த பினியல் சுரப்பியிலிருந்து மெலடோனின் சுரக்கும்.
இதற்கு காரணம் பார்வை நரம்புகள் மூலம் இணைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த சுரப்பி ஆனது இருளை அறிந்து கொள்ளக்கூடிய தன்மையை கொண்டது. ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு பிறகு இருளில் சுரக்கக்கூடிய இது நமது ரத்த நாளங்களில் கலந்து விடும்.
கண்களில் தொடர்ந்து வெளிச்சத்தை பார்க்கும் போது எந்த சுரப்பி கட்டாயம் மெலோடி சுரக்காது. மேலும் இது இரவு 10 மணிக்கு மேல் சுரக்க ஆரம்பித்து அதிகாலை 5 மணிக்கு தன்னுடைய சுரப்பை நிறுத்தி விடக்கூடிய சிறப்பு தன்மை கொண்டது.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பதால் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய இந்த இயற்கை மருந்தை நாம் இழந்து விடுவோம். மேலும் இரவு நேரத்தில் ஒளிரக் கூடிய இரவு விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமும் இந்த ஆபத்து நமக்கு வருகிறது.
எனவே இரவு நேரத்தில் முன்கூட்டியே உறங்கி அதிகாலை எழுவதின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தை குறைத்து விடலாம் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்களின் நூல் ஒன்று மிக அழகான முறையில் கூறுகிறது.
இதற்கு காரணம் அதிகாலையில் வளிமண்டலத்தில் ஓசோன் நிறைந்திருக்கும் அதை சுவாசிப்பதன் மூலம் நாம் உடல் புத்துயிர் பெறுவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றலும் கொண்டது.
அதிகாலை எழுந்து நாம் வேலை செய்யும் போது நமது மூளையும் பெற உறுப்புகளும் ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யக் கூடிய பணிகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.
எனவே இரவு உறங்குவதற்கு முன்பு நீங்கள் இனி உங்கள் வீடுகளில் இரவு விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்த்து வாருங்கள். அவ்வாறு செய்வதின் மூலம் இயற்கை மருந்தினை பெற்று புற்றுநோயின் அபாயத்திலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.