• July 27, 2024

“அழிவை ஏற்படுத்தும் பாசுபதாஸ்திரம்..!” – விஞ்ஞானத்தையே வியப்பில் ஆழ்த்திய அஸ்திரம்..

 “அழிவை ஏற்படுத்தும் பாசுபதாஸ்திரம்..!” – விஞ்ஞானத்தையே வியப்பில் ஆழ்த்திய அஸ்திரம்..

Pashupatastra

இந்து மத புராணங்களின்படி பாசுபதாஸ்திரம் என்பது சிவனின் அற்புதமான ஆயுதமாக கருதப்படுகிறது. இந்த பாசுபதாஸ்திரத்தை சிவன் மட்டுமல்லாமல் காளி, ஆதிபராசக்தி போன்ற தெய்வங்களும் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவர்கள்.

இந்த அஸ்திரத்தை வில்லில் மட்டுமல்ல உங்கள் மனம், கண்கள், வார்த்தைகள், மூலம் நீங்கள் பிரயோகம் செய்து அழிவுகளை ஏற்படுத்த முடியும்.

இன்றைய நியூக்ளியர் அணுகுண்டுகள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை விட பல மடங்கு அதிக அளவு சேதத்தை உருவாக்கக்கூடிய இந்த பாசுபதாஸ்திரம் பிரபஞ்சத்தின் அழிவை நிர்ணயிக்கக்கூடிய தன்மை கொண்டது.

Pashupatastra
Pashupatastra

மேலும் பாசுபதாஸ்திரத்தைஇராமாயணத்தில் விசுவாமித்திர முனிவரும், ராமரும் வைத்திருந்ததைப் போலவே மகாபாரதத்தில் அர்ஜுனனும் வைத்திருந்தார்.

மேலும் பாசுபதாஸ்திரத்தை உதவியோடு தான் திரிபுரா என்ற வானத்தில் மிதந்து கொண்டிருந்த மூன்று தீய அசுர நகர்களை சிவன் அழித்ததாக புராணங்களில் செய்திகள் உள்ளது.

நெருப்பு பிளம்புக்கு ஒப்பான ஒரு மிகப்பெரிய சுடர்விட்டு எரியும் அக்னிப் பிளம்பாக இந்த அம்பால்  தாக்கப்பட்ட திரிபுரா சுடர் விட்டு எரிந்து அழிந்தது.

இந்த ஆஸ்திரத்தை மூன்று தெய்வங்கள் ஆக்கிரமித்து உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் அம்பின் முனையை மகாவிஷ்ணுவும், அம்புக்குறியை அக்னியும், சோமன் தண்டையையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

இந்த பாசுபதாஸ்திரம் நாராயண அஸ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் சர்வ வல்லமை பொருந்திய சுதர்சன சக்கரத்திற்கு ஈடாக இது கருதப்படுகிறது.

Pashupatastra
Pashupatastra

திரேதா யுகத்தில் இராவணனும், துவாபர யுகத்தில் அர்ஜுனனும், இந்த ஆயுதத்தை ஏந்தினார்கள். ராவணன் பாதாளத்தில் எமலோகத்தை தாக்கிய போது பாசுபதாஸ்திரத்தை உபயோகித்து பல மில்லியன் கணக்கான எமனின் ஓர் மில்லியன் சேனைகளைக் கொன்று குவித்தான்.

இதனை அடுத்து இந்த அஸ்திரத்தை பயன்படுத்தக்கூடிய வித்தையை அறிந்து கொண்ட அர்ஜுனனிடம் சிவபெருமான் இந்த அஸ்திரமானது எமன், வர்ணன், குபேரன், வாயு மற்றும் அக்னி தெய்வங்களுக்கு பயன்படுத்த தெரியாது என்பதையும் சூசகமாக தெரிவித்தார்.

மேலும் எந்த பாசுபதாஸ்திரத்தை அசுரர்களை அழித்த பின்பு சிவபெருமான் கைலாய மலைக்கு அருகில் இருக்கும் அமுதம் என்ற நிறைந்த ஏரியில் மறைத்து வைத்தார். பின்னர் தெய்வீக மந்திரங்களை உச்சரித்து இந்த அஸ்திரத்தை தான் வாசுகி பாம்பாக மாற்றினார்.

Pashupatastra
Pashupatastra

தற்போதும் இந்த அஸ்திரமானது அம்ப்ரோசியா ஏரிக்குள் இருப்பதாக பலரும் கருதுகிறார்கள். சிவனின் அளப்பரிய ஆயுதமாக கருதப்படக் கூடிய பாசுபதாஸ்திரமானது, சிவபெருமானை தவிர விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் மட்டும்தான் இந்த அஸ்திரம் பற்றிய உபதேசத்தை அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு வழங்கி இருக்கிறார்.

இதில் சாபம் பெற்ற கர்ணன் அந்த மந்திரத்தை தக்க சமயத்தில் மறந்து போகக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பிரம்மாஸ்திரத்தை நாம் ஒரு நைட்ரஜன் பாம்மாக கூறலாம். அது போலவே இந்த பாசுபதாஸ்திரம் ஒரு நியூக்ளியர் வெப்பனுக்கு ஈக்வலாக இருக்கும்.

மிகவும் கொடூரமான ஆயுதமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆயுதத்தை நடுநிலையாக்கக்கூடிய தன்மை ஆதிபராசக்தியின் கணவனான காமேஸ்வரரின் தனிப்பட்ட ஆயுதமான காமேஸ்வராஸ்திரத்தால் மட்டுமே முடியும்.