• July 27, 2024

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா? 

 குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா? 

Tonsuring

தமிழ் சம்பிரதாயங்கள் இன்றும் பலர் வீட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாடு பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று கூறலாம்.

அந்த வகையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை போடக்கூடிய நிகழ்வு, சம்பிரதாயமா? அறிவியல் ரீதியாக எதற்காக மொட்டை போடும் நிகழ்வு நடத்தப்பட்டது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Tonsuring
Tonsuring

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும். 

எதையுமே முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள், என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று. பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா? தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனி மேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

Tonsuring
Tonsuring

தாயின் வயிற்றில் இருந்து 10 மாதம் குழந்தை பிறக்கும்.அதற்கு முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம். நம் உடலில் ஊறியிருக்கும். இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். 

ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர். ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். 

Tonsuring
Tonsuring

சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது மூன்றாவது மொட்டை போடுவதன் மூலம் அவை வெளியேறிவிடும் என்பதால் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த நல்ல விஷயம் தான் முதல் மொட்டை. அனைத்து பழக்க வழக்கத்திற்கு பின் ஒரு காரணம் உண்டு என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.