“நர மாமிசம் உண்ணும் அகோரிகள்” – யார் இவர்கள் ஓர் அலசல்..
எரிந்து கொண்டு இருக்கும் மனித உடல்களில் இருந்து சில பாகங்களை எடுத்து உண்ணக்கூடிய அசைவ சமய சாதுக்களை தான் அகோரிகள் என்று நாம் அழைக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் கங்கை ஆற்று கரையில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மனித வாழ்க்கைக்கு புறம்பானது என்று கூறலாம். இவர்கள் மனிதப் பிணங்களை உண்பதொடும் மட்டுமல்லாமல் அவர்களோடு உடலுறவு கொள்கிறார்கள் என்ற விஷயத்தை சொன்னால் உங்களுக்கு திகில் ஊட்டும்.
உடல் முழுவதும் சாம்பல் பூசிக்கொண்டு பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்துகின்ற இந்த அகோரிகள் கல்லறையில் வாழ்வதோடு, சிவபெருமானை வழிபடக்கூடிய தீவிர பக்தர்கள்.
மனிதனாகப் பிறந்த இவர்கள் அகோரியாக மாறுவதற்கு முதல் படியாக மனதில் இருக்கும் வெறுப்புகளை நீக்கி விட்டு மனிதர்கள் வாழ விரும்பாத அல்லது செல்ல விரும்பாத கல்லறை போன்ற மர்மம் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து தந்திர சடங்குகளை கற்றுக் கொள்கிறார்கள்.
நிலையில்லாத இந்த சமூக அமைப்பை வெறுத்து அகோரிகளாக மாறுகிறார்கள். அது சரி, இந்த அகோரி என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு சற்று பய உணர்வு குறையலாம்.
ஆம். அகோரி என்றால் சமஸ்கிருதத்தில் ஒளியை நோக்கி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் இவர்கள் கடவுளை நோக்கி செல்வதற்கு தான் இத்தகைய கடுமையான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் என கூறலாம்.
ஸ்வேதாஷ்வதரோபநிஷத்தில் கூட இந்த அகோரிகள் பற்றி குறிப்புகள் உள்ளதோடு சிவனை அகோரனார் என்று அழைக்கிறார்கள். அகோரி பாபாவாகவும், சிவனின் வடிவம் ஆகவும் பார்க்கப்படுகிறார். பாபா பைரவநாதரை அகோரிகள் வணங்கி வருகிறார்கள். இவர்களின் உலகம் ஒரு மாய உலகம், ஆனால் தனித்துவத்தோடு விளங்குகிறது.
அட, அது சரி அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த அகோரி இனத்தின் முன்னோடியாக சிவபெருமானே திகழ்கிறார். அவதூத பகவான் தத்தாத்ரேயர் அகோர சாஸ்திரத்தின் அதிபதியாக விளங்குகிறார். அகோரா பிரிவினர் சிவனை மனதில் கொண்டு அவன் கூற்றுப்படி தன்னை முழுமையாக முயற்சிக்கிறார்கள்.
பச்சையாக நர மாமிசம் திங்க கூடிய இவர்கள் மந்திர நடவடிக்கைகள் மூலம் தங்கள் சக்திகளையும் மேம்படுத்திக் கொள்ள இது போல செய்கிறார்கள் என்று பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. மேலும் இறந்த உடல் அருகே அமர்ந்து கொண்டு சாதனாவை செய்கிறார்கள்.
ஒற்றை காலில் நின்று கொண்டு சிவனுக்கு அந்த பிணத்தின் சதைகளை காணிக்கையாக்க கூடிய இவர்கள் மயானத்தில் அமர்ந்து யாகம் செய்கிறார்கள். அது மட்டுமா? இறந்து போன உடலோடு உடல் உறவு கொள்ளக் கூடிய இவர்கள் அப்படி செய்வதை சிவனையும், சக்தியையும் இணைந்து வழிபடும் முறையாக கருதுகிறார்கள்.
அகோர் பந்த் என்று இந்த வகை அகோரிகளை இந்து மதத்தின் ஒரு பிரிவினராக பார்க்கிறார்கள். நாடு முழுவதும் அகோரிகள் இருந்தாலும் குறிப்பாக காசி பகுதியில் அதிகளவு காணப்படுகிறார்கள்.மேலும் இவர்களிடையேயும் குழுக்கள் உள்ளது.
ஓகாத், சர்பங்கி ஒரே ஆகியவை இவர்களின் குழுக்கள் என்று கூறலாம். கினாராம் எனும் அகோரி தான் அகோரிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறார். இவர் தான் கீதாவலி, விவேகசரா, ராமகீதையை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயா நகரில் ஒவ்வொரு மாதமும் ஜனவரியில் கும்பமேளா நடப்பது பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த கும்பமேளாவில் அதிக அளவு அகோரிகள் கலந்து கொண்டு அந்த விழாவை சிறப்பிக்கிறார்கள்.
அகோரி என்ற வார்த்தையை 18 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் துவங்கப்பட்டிருக்கும். அதற்கு முன் ஏழாம் நூற்றாண்டில் கபாலிக துறவிகள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் பழக்கமும் அகோரிகள் போலவே உள்ளது ஆனால் இவர் மனிதர்களை உயிர்பலி கொடுக்கக் கூடிய வழக்கத்தை கொண்டு இருந்தார்கள்.
அகோரிகளில் பெண் அகோரிகள் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்தால் உங்களுக்கும் மேலும் ஆச்சரியம் ஏற்படும். வட இந்தியாவில் ஆண் அகோரிகளும் மேற்கு வங்கத்தில் பெண் அகோரிகளும் வாழ்கிறார்கள் இதில் பெண் அகோரிகள் உடை அணிந்து இருப்பார்கள்.
இப்போது உங்களுக்கு அகோரிகள் பற்றிய விஷயங்கள் நன்றாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம் மேலும் உங்களுக்கு அகோரிகள் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்திருந்தால் அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.