ஆண்கள் மட்டுமே செல்லும் அதிசய கோயில் – யார் இந்த முனியப்பன் சாமி..
இந்து சமயத்தில் எண்ணற்ற ஆச்சரியங்கள் புதைந்துள்ளது. அந்த விதத்தில் ஒவ்வொரு ஆச்சரியமும், ஒவ்வொரு அறிவியல் சார்ந்த விஷயங்களை நமக்கு எடுத்து சொல்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் போதுதான் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இன்று ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய ஆச்சரியமான முனியப்பன் சுவாமி கோயிலில் சிறப்புகள் மற்றும் அதில் ஒளிந்து இருக்கக்கூடிய உண்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
ஐயப்பன் கோயில் எப்படி பெண்களை அனுமதிப்பதில்லை. அது போலவே இந்த முனியப்பன் கோவிலிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு நடத்த முடியும்.
நீங்கள் கொடுத்த கடன் திரும்பி வரவில்லை என்றால் இனி இந்த முனியப்பன் சுவாமி கோயிலுக்குச் சென்று அங்கு இருக்கும் வேலில் நீங்கள் வேண்டி சீட்டு கட்டி விட்டு வந்து விட்டால் உங்களைத் தேடி பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவுகிறது.
நீங்கள் ஆச்சரியமாக நினைக்கக்கூடிய இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பக்கத்தில் இருக்கும் ஜவ்வாதுபட்டி பகுதியில் தான் அமைந்துள்ளது. பக்தர்களுக்கு அருள் பாதிக்கக்கூடிய இந்த முனியப்பன் சுவாமி இங்கு மாமர முனியப்பனாக எழுந்தருளி இருக்கிறார்.
சுமார் 500 வருடங்கள் தாண்டி பெண்கள் நுழையாத கோயிலாகவே இந்தக் கோயில் உள்ளது. மேலும் இங்கு சுவாமிக்கு பதிலாக மிகப்பெரிய மா மரம் ஒன்று உள்ளது.
இந்த மாமரையில் வேண்டுதல் செய்து குடும்ப பிரச்சனைகளை காகிதத்தில் எழுதி கட்டிவிட வராத கடன்கள் அனைத்தும் வசூல் ஆகும்.
இந்தக் கோயிலில் நேர்த்திக் கடனாக சேவல்களை நேர்ந்து விடுவது மிக முக்கியமான காணிக்கையாக திகழ்கிறது. எனவே கடன் கொடுத்து திரும்ப வரவில்லை என்று கவலையில் இருப்பவர்கள் கட்டாயம் ஒரு நாள் இந்தக் கோயிலுக்கு சென்று கோரிக்கை சீட்டை எழுதி கட்டி விட்டு வந்தாலே போதும். உங்கள் கடன் எளிதில் வசூல் ஆகும்.
காவல் தெய்வமாக விளங்கக்கூடிய இந்த முனி அப்பன் சாமி சிவபெருமானின் காவல் தெய்வம் என்று கூறலாம். முனி அப்பன் என்று பெயர் வருவதற்கு காரணம் அசுரர்களை அழிக்க காத்தாயி அம்மன் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வால் முனி, சட்டை முனி எனும் ஏழு முனிகளை உருவாக்கி அவற்றை ஒன்று சேர்த்து அசுரர்களை அடக்கி வதம் செய்தாள்.
இந்த அனைத்து முனிகளும் ஒரே வடிவமாக மாறி கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வந்த காரணத்தால் அவரை முனியப்பன் என்று அழைத்தார்கள். இவரின் கண்கள் நெருப்பு போல பிரகாசிக்கும். அனல் கக்கும் கண்களும் அருள் ஒளி மேனியும் கொண்டவர்தான் இந்த முனியப்பன்.
எல்லை தெய்வமான இந்த முனியை வணங்கி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பிரச்சனை இல்லாமல் பயணம் செய்யலாம். பல்வேறு குலத்திற்கு இந்த முனியப்பன் குல தெய்வமாகவும் திகழ்கிறார்.