இந்த உலகில் இருளிலும் ஒளிரும் பூஞ்சை உள்ளதா?

Glowing Fungus
இந்த உலகில் தாவரங்களுக்கு என்று ஒரு முக்கியமான இடம் உள்ளது. தாவரங்கள் இல்லை என்றால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மேலும் தாவரங்கள் வெளியிடுகின்ற ஆக்ஸிஜனைக் கொண்டு மனித இனம் வாழ்ந்து வருகிறது.
அத்தகைய தாவர உலகத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் உள்ளது. அந்த வரிசையில் பச்சையம் இல்லாமலிருக்கும் தாவரங்களை பூஞ்சைகள் என்று நாம் அழைக்கிறோம்.இந்த பூஞ்சைகள் இரவில் எப்படி ஒளிர்கிறது என்பதனை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இவை பயோ லுமினசென்ட் எனும் ஒளிரும் பூஞ்சைகள். இந்த பூஞ்சை உலகத்தின் கீழ் சில காளான்கள் உள்ளது. அவை இரவில் ஒளிரக் கூடிய தன்மையை கொண்டுள்ளது.

மேலும் இந்த காளான்கள் மிகவும் வினோதமானவை. அவை உலகெங்கிலுமுள்ள காடுகளில் முளைத்து அவற்றின் தோற்றத்துடன் இருக்கக்கூடிய பச்சையம் இல்லாத ஒரு வகை தாவரம்.
இந்த உலகில் 70க்கும் மேற்பட்ட ஒளிரும் காளான்கள் பல நிறங்களில் உள்ளது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இவை பகல் நேரத்தில் மந்தமாக இருந்தாலும் இரவு நேரத்தில் அனைவரையும் மயக்கும் படி ஒளிரக் கூடிய தன்மையுடன் இருக்கும் .
இயற்கையின் இரவு விளக்குகள் என்று கூட இதைக் கூறலாம். இந்த ஒளி எதற்கு பயன்படுகிறது என்றால் பூச்சிகளை ஈர்க்கவே என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக இதில் ஒளிரும் நீலப்பச்சை ஒளி என்பது பூச்சிகளை ஈர்ப்பதற்கு மட்டுமே பயன் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒளிரக்கூடிய 12 வகையான காளான் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிதிருக்கிறார்கள்.
இந்த காளான்கள் ஒளிவதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் போது அதில் லூசிஃபெரின்ஸ் எனப்படும் ஒருவகையில் மூலக்கூறு தான் காரணம். இந்த வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து ஒளி கொண்டு வருபவர் எனும் பொருளில் வந்தது.
இவை ஆக்சிஜனுடன் மற்றொரு எதிர்வினை வேதிப் பொருளுடன் வினைபுரிந்து ஒளியை வெளியிடும் உயர் ஆற்றல் உற்பத்தியாக விளங்குகிறது.
இந்த ஒளி உமிழும் தயாரிப்பு ஆக்சிலூசிஃபெரின் என்று அழைக்கப்படுகிறது. Panellus stipticus, Panellus, Pusillus armillaria, Mellea மேலே கூறப்பட்டுள்ள காளான்கள் அனைத்தும் ஒளிரும் வகுப்பை சேர்ந்தவையே. நம்மை சுற்றி இருக்கும் அதிசயங்களை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறதல்லவா.