“நித்தம் நித்தம் நெல்லு சோறு..!”- உங்கள் பார்வைக்கு நெல் பற்றிய வரலாறு..
இன்று பெரும்பாலான நாடுகளில் அரிசி உணவு ஒரு முக்கிய உணவாக இடம் பிடித்து உள்ளது. அப்படிப்பட்ட இந்த அரிசி உணவைத் தரும் நெல் பற்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லையெனில் இந்தக் கட்டுரையில் இனி தெரிந்து கொள்ளலாம்.
புல் வகையைச் சேர்ந்த தாவரமான நெல் முதன் முதலில் தெற்காசியாவில் தோன்றியது என்று கூறுகிறார்கள். இது ஈர நிலங்களில் மட்டுமே வளரக்கூடியது. சராசரியாக இதன் ஆயுட்காலம் ஐந்து மாதங்கள் என்று கூறலாம்.
இந்த நெல்லில் இருக்கும் பூமியை நீக்கி விட்டால் அரிசி என்ற பொருள் கிடைக்கும். இதைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம். நெல்லின் மேலுரை நீக்கப்பட்ட பகுதியை அரிசி என்று தான் அழைக்கிறோம்.
இந்த அரிசிக்கு முளைக்கக்கூடிய திறன் இல்லை. எனினும் மேல் உரையை நீக்காமல் வைத்து விட்டால் கண்டிப்பாக அது முளைக்கும் திறனோடு இருக்கும்.
நெல், சோளம் கோதுமைக்கு அடுத்தபடியாக அதிகம் விளையக்கூடிய தானிய வகைகளில் ஒன்று என கூறலாம். இந்த நெல்லில் இரண்டு வகைகள் காணப்படுகிறது. அவை முறையே ஆசிய நெல் என்றும் ஆப்பிரிக்க நெல் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கிமு 4500 ஆண்டுகளுக்கு முன்பாகவே நெல் சாகுபடிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. நெல் இனங்களிலேயே முன்னோடியாக காட்டு நெல் இனம் திகழ்கிறது.
ஆசிய நெல் சிற்றினங்கள் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. மேலும் சீனப் பகுதிகளும், இந்த இனங்கள் தோன்று இருக்கலாம் என்ற கருத்துக்கள் நிலவுகிறது.
சங்க கால நூல்களிலும் நெல் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஔவையார் மற்றும் பல புலவர்கள் நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல காணப்படுகிறது. நெல் விளையும் பகுதிகளில் எனில் நடுதல் அறுவடை போன்றவை பற்றிய குறிப்புகளும் உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் கிமு 1500 காலகட்டத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அரேபியர்களால் கிபி 7 முதல் 11 ஆம் நூற்றாண்டில் நெல் பயிரிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஜப்பானில் நெற் பயிரை சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஜப்பானியர்கள் முன்னால் நீளமான தண்டுடைய நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்வதற்கான குறிப்புகள் காணப்படுகிறது. எனவே நெல் சாகுபடி கிமு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகம் ஆகி இருக்கலாம்.
ஆசிய நெல்லினமானது மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரக் கடை நாடுகளிலும் கிமு 800 பயிரிட துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மௌரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நெல்லானது 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தாலி, பிரான்சு போன்ற நாடுகளுக்கும் பெற கண்டங்களுக்கும் பரவி இருக்கலாம் என்று நெல் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.