• December 4, 2024

“நான்காயிரம் ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்..!” – மிரள வைக்கும் வினோதம்..

 “நான்காயிரம் ஆண்டுகளாக உருகாத நெய் லிங்கம்..!” – மிரள வைக்கும் வினோதம்..

Ghee Lingam

இந்தியாவைப் பொறுத்தவரை வடநாட்டிலும் சரி, தென்னாட்டிலும் சரி, சிவ வழிபாடு என்பது சீரும் சிறப்புமாக பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நெய்யால் உருவாக்கப்பட்ட லிங்கமானது எத்தகைய சூழ்நிலையிலும் உருகாத நிலையில் இன்றும் அப்படியே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது என்றால் உங்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

Ghee Lingam
Ghee Lingam

அப்படிப்பட்ட நெய்யால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள கோவில் எங்கு உள்ளது தெரியுமா? இந்த நெய் லிங்கத்தை உருவாக்கியவர் யார்? என தெரிந்து கொள்ள வேண்டாமா..

உங்கள் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடையாக இந்த கட்டுரை அமைய உள்ளது. மேலும் இந்த லிங்கமானது கேரளாவில் இருக்கும் சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கோயில் என்று கூறலாம்.

எத்தகைய கோடை காலத்திலும் உருகாத அதிசய நெய் லிங்கமாக இருக்கும், பரமசிவனின் இந்த ஆலயம் ஆனது திருச்சூரில் இருக்கும் ஸ்ரீ வடக்கு நாதர் சுவாமி ஆலயம் தான். இந்த ஆலயம் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமனால் உருவாக்கப்பட்ட முதல் ஆலயம் என்று கூறலாம்.

Ghee Lingam
Ghee Lingam

சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவிலாக இருக்கக்கூடிய இந்தக் கோயிலில் தான் இந்த அதிசய நெய் லிங்கம் உள்ளது. இந்த நெய் லிங்கத்தின் வரலாறு பற்றி இப்போது பார்க்கலாம்.

 விஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் பல சத்திரிய இனங்களை அழித்து, அந்தப் பாவத்தை போக்க திருச்சூரில்  மேடான பகுதியில் ஒரு கோவிலை அமைக்கிறார்.

அந்த சமயத்தில் இறைவன் சிவ கணங்களில் ஒருவரான சிமோதரனிடம் பூவுலகில் தான் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்ய கட்டளை இடுகிறார். அப்போது அந்த சிமோதரன் பரசுராமன் அமைக்கும் சிவாலயம் பற்றி கூறியதோடு அந்த ஆலயத்தின் அழகில் மெய் மறந்து அங்கே தங்கி விடுகிறார்.

Ghee Lingam
Ghee Lingam

இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் சிமோதரனை எட்டி உதைக்க, சிவனின் கோபத்தை தணிக்க பரசுராமர் சிவனின் மீது நெய்யை ஊற்றி அவரை குளிர்ச்சி ஆக்கி கோபத்தை குறைக்கிறார்.

அப்படி கோபம் குறைந்த சமயத்தில் தான் சிவன் அங்கு லிங்கமாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நெய் லிங்கமானது 12 அடி உயரம் 25 அடி அகலம் கொண்டுள்ளது. அமர்நாத்தில் எப்படி பனி லிங்கம் உள்ளதோ அதுபோல இந்த ஆலயத்தில் நெய் லிங்கம் உள்ளது.

Ghee Lingam
Ghee Lingam

இந்த நெய் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் போதும், தீப ஆராதனை செய்யும் போதும் அந்த நெய் இது வரை உருக்கியதே இல்லையாம்.  பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் இந்த நெய்யை உண்பதின் மூலம் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

நீங்களும் முடிந்தால் ஒரு முறை நெய் லிங்கத்தை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெறுங்கள்.