• July 27, 2024

“உடலில் ஜீரணத்தை தூண்டும் ரசம்” – விரிவான ஆய்வு அலசல்..!

 “உடலில் ஜீரணத்தை தூண்டும் ரசம்” – விரிவான ஆய்வு அலசல்..!

Rasam

தமிழ் கலாச்சாரத்தை பொருத்தவரை உணவு பழக்க வழக்கங்களில் ரசம் ஒரு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவு செரிமானத்தை அதிகப்படுத்தக்கூடிய அற்புதமான இந்த ரசத்தை யார் கண்டுபிடித்தார்கள்? என்பது இதுவரை சர்ச்சை தான் ஏற்படுத்தி உள்ளதே தவிர இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

 

எனினும் இந்த ரசம் வைக்கும் பழக்கமானது 14ஆம் நூற்றாண்டில் உண்டானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த ரசத்தின் பிறப்பிடம் மதுரையாக இருக்கலாம் என்று ஒரு சாராரும், இல்லை மங்களூரு தான் ரசத்திற்கு முக்கியத்துவம் தருகிறது.

 

 மேலும் பந்தியில் முதலாவதாக பரிமாறப்படும் ரசம், அங்கு இன்றும் நடைமுறையில் உள்ளதால் மங்களூர் தான் ரசத்தின் பிறப்பிடமாக இருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

Rasam
Rasam

இந்த ரசத்தை ஒரு மசாலா சூப் என்று கூட கூறலாம். பாரம்பரியமிக்க இந்த உணவினை உட்கொள்வதின் மூலம் பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

 

பாரம்பரியமான இந்த தென்னிந்திய உணவு வகையான ரசத்தில் நல்லெண்ணெய், மஞ்சள், தக்காளி, மிளகாய், மிளகு, பூண்டு, சீரகம், கருவேப்பிலை, கடுகு, கொத்தமல்லி, உப்பு, தண்ணீர், புளிக்கரைசல் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

 

மேற்கூறிய இந்த பொருட்கள் அனைத்துமே பலவகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படக்கூடிய பொருட்கள் என்பதால் அன்றாட உணவில் இந்த ரசத்தை சேர்த்துக் கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பல்வேறு மருத்துவம் சார்ந்த ஆய்வுகள் கூறுகிறது.

 

வரலாற்று ரீதியில் பார்க்கும் போது பதினாறாம் நூற்றாண்டில் மதுரையில் விஜயநகர பேரரசு வீழ்ந்த பிறகு, சௌராஷ்டிரா அரசு நிறுவப்பட்டது. இவர்களின் முக்கிய உணவாக இந்த புளி கூழ் திகழ்ந்துள்ளது.

 

இதுதான் மிளகு மற்ற பொருட்களை இணைத்து ரசம் வடிவத்தில் தமிழகத்தின் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் உணவுக்கு இடையே இந்த ரசத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Rasam
Rasam

மேலும் ரசம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையை தான் குறிக்கிறது. இதன் அர்த்தம் சாறு என்பதுதான். மேலும் ஆரம்ப நாட்களில் தக்காளி, கருவேப்பிலை மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு சூப் வகையாக இது இருந்துள்ளது.

 

இதனைப் பற்றி பிரபல உணவு வரலாற்று ஆசிரியர் கேடி ஆச்சாயாவின் கூற்றுப்படி ஆங்கிலேயர்கள் ரசத்தை, மிளகு என்ற தமிழ் வார்த்தைகளில் இருந்து “முல்லிகடாவ்னி” என்று அழைத்தார்கள். இதற்கு மிளகு என்று பொருள் தண்ணி என்றால் தண்ணீர். இதைத்தான் ஆங்கிலத்தில் பேப்பர் வாட்டர் என்கிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் மதுரையில் வசித்து வந்த ஒரு சமையல் காரன் பெயர் கருணாஸ் இவர் கண்டுபிடித்தது தான் இந்த ரசம் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இதற்கு காரணம் மன்னர் மகன் நோய்வாய்ப்பட்டு இருந்த போது அவர் எளிமையாக உண்ணக்கூடிய வகையில் இந்த ரசத்தை கருணாஸ் சமைத்ததாக கூறப்படுகிறது.

Rasam
Rasam

எனவே தான் இன்றும் நோயாளிகளுக்கு ரசம் மிகச்சிறந்த உணவுப் பொருளாக திகழ்கிறது. மேலும் இந்த ரசத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. சளி பிடிக்காமல் இருக்க உறுதுணையாக இருக்கும்.

இதற்குக் காரணம் ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு வெந்தயம், கடுகு பெருங்காயம், இஞ்சி போன்றவை ஆகும்.

Rasam
Rasam

இன்று இந்த ரசத்தில் பல வகையான ரசங்கள் உண்டு. அது பருப்பு ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், புளி ரசம், பைனாப்பிள் ரசம், இளநீர் ரசம், ரோஜா பூ ரசம், மைசூர் ரசம் என விதவிதமான ரசங்களை வைத்து அசத்தக்கூடிய நமக்கு தற்போது இந்த ரசத்தின் பெருமை புரிந்து இருக்கும்.

 

மேலும் சளிக்கு ஏற்ற வெற்றிலை ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். வேப்பம்பூ ரசம் நெஞ்சு சளியை குறைக்கும். கொள்ளு ரசம் இது போன்ற ரசத்தை மழைக்காலத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


1 Comment

  • Super நண்பா ரசத்தையும் நினைவில் கொண்டுவந்ததற்க்கு.. ❤️

Comments are closed.