• October 7, 2024

யாதவ குலத்தையே அடியோடு அழித்த காந்தாரியின் சாபம்..! – கடவுள் கண்ணனுக்கே இந்த நிலையா?

 யாதவ குலத்தையே அடியோடு அழித்த காந்தாரியின் சாபம்..! – கடவுள் கண்ணனுக்கே இந்த நிலையா?

Gandhari

ராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் இல்லாத விஷயங்களில் இல்லை, என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு மனிதனும் நல்வழியில் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்த கூடிய வகையில் இந்த இரண்டு காவியங்களில் கதைகளும் இருக்கும்.

 

இதில் மகாபாரதத்தை பொருத்தவரை பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை சுற்றி தான் கதை நகரும். இந்தக் கதையில் கௌரவர்களை பெற்றெடுத்த காந்தாரி பற்றியும், அவள் கடவுள் கண்ணனுக்கு அளித்த சாபத்தால் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

 

கற்புக்கரசிகளின் வரிசையில் காந்தாரியும் ஒருவள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவள் காந்தரா எனும் நாட்டில் பிறந்தவள். இவரது தந்தை சுபல மகாராஜா ஆவார். மிகச்சிறந்த சிவ பக்தையான காந்தாரி அனுதினமும் சிவனை வழிபட்டு சிவனிடம் இருந்து வரம் பெற்றவள்.

Gandhari
Gandhari

இந்த வரத்தைப் பெற்றதின் காரணத்தால் தான் கண் தெரியாத வரை திருமணம் செய்த போதும், கூட 100 மகன்களை காந்தாரியால் பெற்றுத் தர முடிந்தது. இவளது சகோதரன் தான் சகுனி.

 

தனது தங்கையை குரு வம்சத்திற்கு திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் ,பீஷ்மரின் மீது கொண்டிருந்த கடுமையான கோபத்தால் குரு வம்சத்தை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்.

 

திருதராஷ்டிரனின் மனைவியான காந்தாரி தன் கணவனுக்கு கண் தெரியவில்லை என்ற காரணத்தால் தானும் இந்த உலகை பார்க்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு இந்த உலகை பார்க்காமல் கடைசி வரை இருந்திருக்கிறாள்.

 

குருஷேத்திரப் போர் நிகழக்கூடிய சமயத்தில் தான் அவள் தன்னுடைய கண்ணை கட்டியிருந்த துணியினை அவிழ்த்து அதில் தேக்கி வைத்திருந்த அத்தனை ஆற்றலையும், தனது மகன் துரியோதனனின் உடலைக் காக்கக்கூடிய கவசமாக மாற்ற உதவி புரிந்தாள்.

Gandhari
Gandhari

இந்த சூழ்நிலையில் காந்தாரியின் கண்களில் ஒளிந்திருக்கும் அற்புத ஆற்றலை உணர்ந்த கடவுள் கண்ணன், என்னதான் பெற்ற தாயாக இருந்தாலும் அவள் முன் நிர்வாணமாக போய் நிற்காதே என்று சூசகமாக துரியோதனனிடம் அறிவுரை கூறியதன் காரணத்தால் தன் தாயை சந்திக்கும் போது இடையில் ஒரு உடையை உடுத்திக் கொண்டு சென்றதின் காரணத்தால் அந்த இடத்தில் மட்டும் அவளின் ஆற்றல் போய் சேரவில்லை என கூறலாம்.

 

இவள் உயர்ந்த பதிபக்தி கொண்டிருந்ததின் காரணத்தால் அதீத சக்திகளை பெற்று தனது மகன்களை காப்பாற்ற எண்ணினாள். ஆனாலும் கண்ணனின் சூட்சும புக்தியால் காந்தாரியின் சக்திகள் தகடு பொடியாய் கௌரவ குலமே அழிந்தது.

 

இதனை அடுத்து தவமிருந்து பெற்ற குழந்தைகளின் மரணமே, அறிவாளியான காந்தாரியின் புத்தியை பேதலிக்க வைத்து கண்ணனுக்கு சாபம் இட வைத்தது என கூறலாம்.

 

யுத்தம் முடிந்த பிறகு யுத்த பூமியை பார்வையிட வந்த காந்தாரி, அங்கு கண் 100 புதல்வர்களையும் இழந்ததை எண்ணி அழுததோடு மட்டுமல்லாமல் தன் தன் மருமகனையும் கொன்று தன் மகளை விதவையாக்கிய பாண்டவர்கள் மீது கோபம் கொண்டால்.. அவள் கோபத்தில் நியாயமும் இருந்தது.

Gandhari
Gandhari

அவள் மனதில் இருந்த அத்தனை வேதனைகளையும் தர்மரின் முன் கூறும் போது அவள்  கண்களில் கட்டி இருந்த துணி சற்று இற்று போய் இருந்ததால் அந்த இடுக்கின் வழியாக தர்மரின் கால் அவளுக்கு தெரிந்தது.

 

அந்த சமயத்தில் தனது வேதனையை புலம்பித் தள்ளும் போது காந்தாரியின் பார்வையில் பட்ட தர்மரின் கால் பாதம் பற்றி எரிந்தது. அந்த அளவு அவள் கண்களுக்கு வலிமை இருந்தது என்று கூறலாம்.

 

கால் பாதம் பற்றி எரிவதை பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், இனி விட்டால் தர்மனையும் எரித்து விடுவாள் என்று உணர்ந்து கொண்டு காந்தாரியை சமாதானப்படுத்த அவளின் அருகே வந்து காந்தாரியை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.

 

கண்ணன் தன் அருகே வந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்ட காந்தாரி கோபத்தால் பொங்கி எழுந்தாள். அந்த இடத்தில் கண்ணனை பேச விடாமல் அவளே பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சில் கோபம் அக்கினியாய் கொழுந்து விட்டு எரிந்தது என்று கூறலாம். அது பேச்சல்ல கண்ணனுக்கு கொடுக்கின்ற சாபம் என்பது சற்று நேரம் கழித்து தான் அனைவருக்கும் புரிந்தது. இதனை அடுத்து பலிக்கு ஆடு தானாக வந்து மாட்டிக்கொண்ட நிலையில் கண்ணன் வாய் திறக்காமல் அப்படியே நின்று விட்டார்.

Gandhari
Gandhari

இதனை அடுத்து காந்தாரி தேவகி புதல்வனைப் பார்த்து எப்படி பேசுகிறாள் தெரியுமா? கண்ணா.. நீ நன்றாகப் பார் எத்தனை பெண்கள் தலைவிரி கோலத்தோடு அவர்கள் கணவனின் உடலை தேடி ஓடுவதை பார்.

 

ரத்தக் கலரியாக கிடைக்கின்ற யுத்த பூமியில் கழுகுகளும், நரிகளும், ஓநாய்களும் மனித உடல்களை தின்பதைப்பார். உன்னை அனைவரும் பகவான் என்று மரியாதையாக வணங்கக்கூடிய உன் பக்தர்களுக்கு நீ தந்திருக்கும் வேதனையை நன்றாக பார்.

 

எதற்காக நீ இவ்வாறு நிகழ்த்தினாய்.. உன் லீலைகளை வெளிப்படுத்த என் குலத்தை நீ அழித்தது ஏன்? அன்று இதே சபையில் வீட்டுக்கு விலக்காக இருந்த திரௌபதியை அழைத்து வந்து ரத்தம் படிந்த வஸ்திரத்தை துச்சாதனன் பறித்த போது நீ அவளுக்கு அபயம் தந்ததை அறிந்தவள் தான் நான்.

 

இந்த குருசேத்திரப் போர் கட்டாயம் ஏற்படும் என்ற நிலை உனக்குத் தெரிந்திருந்தால், அதை நீ தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.. ஏன் இப்படி செய்தாய்? இதில் உனக்கு என்ன கிடைத்தது.

Gandhari
Gandhari

பதில் அளிக்காமல் இருக்கும் உனக்கு நான் இப்போது சாபம் அளிக்கிறேன். இன்னும் 36 ஆண்டுகளுக்குப் பின் நீ உன் வம்சம் எதுவும் இந்த உலகில் இருக்காது.

 

எப்படி குரு வம்சமானது தனக்குள் சண்டையிட்டு அழிந்ததோ.. அதுபோல உன் யாதவ வம்சமும் உன் கண் முன்னாலேயே அழிந்து போகும். அதை நீ பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியுமே ஒளிய தடுத்து நிறுத்த முடியாது. மேலும் உன் குலத்தை நீயே அழிக்க வேண்டிய காலம் ஏற்படும்.

 

பகவானாக நினைத்து பலராலும் பூஜிக்க படக்கூடிய நீ ஒரு விலங்கை போல வனத்தில் அலைந்து திரிந்து பின் ஒரு வேடுவனின் கையால் இறந்து போவாய். உனக்கு கடைசி கால ஈமக் கிரியை கூட செய்ய ஆள் இல்லாமல் உன் உடலானது கடல் நீரில் மிதக்கட்டும் என்று சாபம் கொடுத்தாள்.

 

அது மட்டுமல்லாமல் ஜராசந்தனிடமிருந்து உன் குலத்தைக் காக்க நீ உருவாக்கிய துவாரகா நகரமே சமுத்திரத்தின் ஆழிப்பேரலையால் அழிந்து போகட்டும். இன்று எப்படி குருகுல பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்களோ.. அதுபோல உன் குல பெண்களும் கண்ணீர் வடித்து தலைவிரி கோலத்தோடு விதவையாய் அலையட்டும்.

 

என்னுடைய உற்றார், உறவினர் அனைவரும் அழிந்து போக காரணமாக இருந்த நீ அதேபோல் உன்னால் உன்னுடைய உற்றார், உறவினர் அனைவரும் அழிந்து போக காரணமாவாய். கௌரவ குல பெண்கள் அழுது.. அழுது.. அழிந்தது போலவே யாதவ குல பெண்களும் அழுது அழுது  போகட்டும் என சாபமிட்டாள்.

 

இதை அவையில் கேட்டிருந்த அனைவரும் அதிர்ச்சியோடு காந்தாரியின் சாபம் கட்டாயம் பலிக்குமே, பொய் ஆகாதே என்று கலங்கினார்கள். ஆனால் கண்ணன் மட்டும் காந்தாரியின் சாபத்தை கேட்டு கலங்காமல் சிரித்த முகத்தோடு மிருதுவான குரலில் பேசினார்.

 

மேலும் கண்ணன் பேசும்போது நீங்கள் இட்ட சாபத்தால் எனக்கு எல்லாம் சுலபமாகிவிட்டது. என்னைத் தவிர வேறு யாராலும் யாதவ குலத்தை அழிக்க முடியாது என்ற உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே தங்களுடைய சாபத்திற்காக வருந்தவில்லை. உங்கள் மேல் எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை. இதுதான் விதி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று விதி எழுதியுள்ளது. அதுதான் தங்கள் நாவில் சாபமாக வந்துள்ளது என தடுமாறாமல் கண்ணன் கூறினான்.

 

மேலும் தனக்கு பிறக்கவில்லை என்றாலும் தன்னுடைய அன்பு கணவரின் ஆருயிர் மகன் யுயுத்சு, தற்போது உயிரோடு இருப்பதால் அவன் கௌரவன் என்ற வார்த்தையை கூறி அவனை கண்ணன் ஆசீர்வதித்த பின்னரே காந்தாரியின் கோபம் தணிந்தது.

 

இதனைத் தொடர்ந்து யாதவர்களுக்கு இடையே மகாபாரத போர் குறித்த சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து யாதவர் குலம் இரண்டாக பிரிந்தது.

 

யாதவ குலம் இரண்டாக பிரிந்ததோடு நின்று விடாமல் ஒரு மகாபாரத போர் அளவுக்கு இரு பிரிவினர்களுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டது. இந்தப் போருக்கு காரணமான சாத்யகி ஒருபுறம் செத்துக்கிடக்க மறுபக்கம் கிருஷ்ணனின் மகனாகிய ப்ரத்யும்னன் இறந்து கிடக்கும் நிலையைப் பார்த்து கண்ணன் சற்று தடுமாறினார்.

Gandhari
Gandhari

மேலும் எந்த நிலைக்கு காரணமாக இருந்த தம் இன மக்களையே, அடித்து தொம்சம் செய்து கண்ணன் கொன்றார். மேலும் இந்தப் போராட்டத்தில் கண்ணனின் எல்லா பிள்ளைகளுமே இறந்து போனார்கள். கடைசியாக மிஞ்சியிருந்தது இரண்டு யாதவர்கள் மட்டுமே அவர்களும் கண்ணனை இடைவிடாமல் துதித்து அவன் ருத்ரத்தை சாந்தி செய்தார்கள்.

 

எனினும் காந்தாரியின் சாபம் வேலையை காட்ட ஆரம்பித்தது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் காந்தாரி கிட்ட சாபம் 36 ஆண்டுகள் கழித்து பலித்தது. குடியின் காரணமாக சீரழிந்த யாதவ குலம் கடைசியில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரை விட்டார்கள். 

 

36 ஆண்டுகளுக்கு மேலாக துவாரகையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த கண்ணன் இதையெல்லாம் பார்த்து சசிக்க முடியாத கண்ணன், அர்ஜுனனை அழைத்து யாதவ குல பெண்கள் அனைவரையும் ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லுமாறு கூறிவிட்டு தனது சக்ராயுதத்தைக் கொண்டு துவாரக நகரை அழித்தார்.

 

இதனை அடுத்து காந்தாரி கூறியது போல கானகத்தில் அலைந்து திரிகின்ற போது வேடுவன் ஒருவரால் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டார். இதன் மூலம் கடவுளே என்றாலும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற கூற்று உண்மையாகி விட்டது.