• October 5, 2024

” சோழர்களின் கோட்டைகளை சூறையாடி வம்சத்தையே கருவறுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்..!” – தமிழ் பற்று..!

 ” சோழர்களின் கோட்டைகளை சூறையாடி வம்சத்தையே கருவறுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்..!” – தமிழ் பற்று..!

Maravarman Sundara Pandyan

பண்டைய தமிழகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சியை தொடர்ந்து பாண்டிய பேரரசின் தொடக்கம் ஆரம்பித்தது. பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவாற்றலும்,வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக மாறவர்மன் சுந்தரபாண்டியன் திகழ்ந்தான் .

 

கிபி 1092 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தை மகன் ராஜேந்திர சோழருக்கு சூட்டினார். இதனை அடுத்து இவர் தனது வாழ்நாளை பழையாறையில் கழித்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

Maravarman Sundara Pandyan
Maravarman Sundara Pandyan

பாண்டிய மன்னனான மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன்னுடைய மூதாதையர்கள் மேல் தீராத பற்று கொண்டவர். ஏற்கனவே சோழர்கள் தங்களது மூதாதையர்களுக்கு செய்த கொடுமைகளுக்காக, அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் சோழப் பேரரசின் மீது போர் தொடுக்க விரும்பினார்.

 

இதனை அடுத்து மாபெரும் ஆற்றலோடு பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பழையாறை சோழ மாளிகை மற்றும் அதை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளை சூறையாடினார்.

 

சோழர்களின் வரலாற்றைப் பற்றி பேசும்போது பழையாரில் இருக்கக்கூடிய பழமையான கட்டிடங்கள் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் ராஜராஜ சோழனின் மனைவியின் ஒருவரான பஞ்சமன் மாதேவி இறந்த பிறகு அவரை பட்டீஸ்வரம் என்ற இடத்தில் அடக்கம் செய்தார்கள்.

Maravarman Sundara Pandyan
Maravarman Sundara Pandyan

அந்த இடத்தில் ராஜேந்திர சோழன் எழுப்பிய கோயில் ஆனது சோழர்களின் வரலாற்று முக்கியமானது. எனினும் 13 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் மீது படை எடுத்து சோழத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தையும், அவர்களின் அரண்மனையை தரைமட்டம் ஆக்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழ நாட்டின் பெரும் பட்டினங்கள் அனைத்தையும் அழித்தான்.

சோழர்களின் மீது அவன் கொண்டிருந்த பகையால், சோழ வம்சத்தையே கரு அறுக்க துணிந்த இவன் கரிகால் சோழனால் புலவர் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசாக அளிக்கப்பட்ட 16 கால் மண்டபத்தை மட்டும் அப்படியே விட்டுச் சென்றார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

 

இதற்குக் காரணம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் மீதும் புலவர்களின் தமிழ் புலவர்களின் மீதும் கொண்டிருந்த பற்றின் காரணத்தினால் அந்த மண்டபத்தை சிறிது கூட சேதப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்றதின் மூலம் அவரது தமிழ் பற்று இன்றுவரை பேசப்படுகிறது.

 

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியும் நீலமும் நின்று கவினிழப்ப

வாவியும் மாறும் மணிநீர் நலனழித்துக்

கூடமும் மாமதிளுங் கோபுரமும் ஆடரங்கும்

மாடமும் மாளிகையும் மண்டபமும் பல இடித்து..

Maravarman Sundara Pandyan
Maravarman Sundara Pandyan

இந்தப் பாடல் வரிகளை நீங்கள் படித்துப் பார்க்கும்போதே தஞ்சை எப்படி சின்னா, பின்னமாக மாறி இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

 

கிபி 1218 இல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உறையூறையும், தஞ்சாவூரையும் தீயிட்டுக் கொளுத்தினான். இதனை அடுத்து தஞ்சை அழிந்து ஆயிரத்தளி அரண்மனை பாண்டியர்களின் கைவசம் சென்றது.