• October 12, 2024

“சதுரகிரிக்கும் இமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? – அகத்தியர் என்ன செய்தார்?

 “சதுரகிரிக்கும் இமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? – அகத்தியர் என்ன செய்தார்?

Agathiyar

சப்த ரிஷிகளில் ஒருவராக திகழ்கின்ற அகத்தியரின் முதல் சீடரான போகர், இன்று இருக்கும் பழனி முருகனின் சிலையை செய்தவர். ஏராளமான ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய மகா திறமைசாலியான இவர் 18 சித்தர்களில் முதன்மையானவர்.

 

அகத்தியர் ஆற்றிய பணிகளைப் பார்க்கும்போது இவர் குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்று இவரை ஒரு கால வரையறைக்குள் கொண்டுவர முடியாது. எனினும் ஒரு சிலர் இவர் 4,000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். அது எப்படி சராசரி ஆயுட்காலம் 100 வயது என்ற போது இவர் மட்டும் நான்காயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரா என்ற ஆச்சரியம் நம்முள் எழுவது இயற்கை தான்.

Agathiyar
Agathiyar

அகத்திய முனிவரால்தான் இன்று தமிழகத்தில் சித்த மருத்துவம் தழைத்து உள்ளது என்று கூறலாம். இவர் வழிவகை செய்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். இவர் நட்டாற்றீஷ்வரத்தில் பிரதிஷ்டை செய்த லிங்கம் இன்றும் புது பொழிவோடு காட்சி தருகிறது. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும், வெறும் மணலுடன் குலைத்து உருவாக்கப்பட்ட இந்த மணல் லிங்கம் கட்டுறுதியோடு இருப்பதின் காரணம் புரியாமல் பலரும் திகைத்து இருக்கிறார்கள்.

 

அகத்திய முனிவர் தனது சக்தியையும், சூட்சும உயிரையும், ஒரே இடத்தில் விட்டு செல்வார் என்று நம்பப்படுகிறது. இவரது மன உடலை மதுரைக்கு அருகே இருக்கும் சதுரகிரி மலைப்பகுதியில் விட்டு சென்றார். மேலும் கார்த்திகேயன் உதவியோடு அவர் தனது ஸ்தூல உடலை சிவன் இருந்த கைலாயத்திற்கு எடுத்துச் சென்று அங்கே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Agathiyar
Agathiyar

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அவரது ஆத்மாவானது சதுரகிரி மலையிலும், உடலானது இமயமலையிலும் என்றால் நினைத்துப் பாருங்கள். அது எப்படிப்பட்ட அற்புதமான ஒரு செயல்பாடு என்பது உங்களுக்குப் புரியும்.

 

சப்த ரிஷிகள் அனைவரும் ஆரம்பத்தில் இதுபோன்ற விசேஷ சக்திகளோடு பிறக்கவில்லை. சாதாரணமாகத்தான் இந்தியாவின் துணை கண்டத்தில் எங்கோ ஒரு பகுதியில் பிறந்தார்கள். அவர்கள் யோகா மற்றும் சாதனப் பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் தான் இத்தகைய உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள்.

Agathiyar
Agathiyar

இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் யோகக் கலை ஒரு மனிதனை மிகச் சிறப்பானவனாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. அதை முழுமையாக செய்து தீவிர பயிற்சியை எடுப்பது மூலம் கட்டாயம் மனிதர்கள் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

 


1 Comment

  • Very nice

Comments are closed.