• November 5, 2024

பேய்கள் பற்றிய அமானுஷ்யம்..! – திகிலான பேயின் மறுபக்கம்..!

 பேய்கள் பற்றிய அமானுஷ்யம்..! – திகிலான பேயின் மறுபக்கம்..!

Ghost

பிறப்பு என்று உள்ளதைப் போல் இறப்பு என்பது கட்டாயம் இருக்கும். இது ஒரு உலக நியதி என்று கூட கூறலாம். எனினும் மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான், என்ன நடக்கிறது என்பது இதுவரை அறியப்படாத விஷயமாகவே உள்ளது.

 

அந்த வகையில் தனது ஆயுள் காலம் முடிவதற்கு முன்பே உடல்நிலை சீர்கேட்டின் காரணமாக, விபத்துக்களாலும் இறக்கக்கூடிய மனிதர்களின் ஆவியானது பூமியை சுற்றியே இருக்கும் என்ற கருத்து தொன்று தொற்று நிலவி வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆத்மாக்களை பேய் என்ற பெயர் சொல்லி நாம் அழைத்து வருகிறோம். அப்படிப்பட்ட பேய்கள் பற்றிய அமானுஷ்ய நிகழ்வுகள் அன்றாடம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறிய வண்ணம் தான் உள்ளது.

Ghost
Ghost

எனினும் பல அத்தகைய பேய்களை நேரில் பார்த்ததாகவும், அதனால் பயம் ஏற்பட்டதாகவும் தொடர்ந்து செய்திகளை வைரலாக மாற்றி வருகின்ற வேளையில் இந்த பேய்கள் பற்றிய மறுபக்கத்தைப் பற்றி  கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 

மனித இனத்தில் பல்வேறு துறைகள் உள்ளது போல், பேயைக் குறித்து ஆய்வு செய்யும் துறையும் ஒன்று உள்ளது. மேலும் இந்த பேயைக் குறித்து ஆய்வு செய்யும் வல்லுனர்கள் பேய்களைப் பற்றி அறிந்து கொள்ள பல வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் Ghosts and Gravestones என்று சொல்லக்கூடிய அனுபவங்களைப் பற்றி பார்க்கும் போது மிகவும் நிகழ்வாகத்தான் இருக்கும். மேலும் அறிவியலால் விளக்க முடியாத இந்த நிகழ்வை புரிந்து கொள்ள புகைப்பட கருவிகளோ, பேய்கள் பற்றிய அறிவும் மிக அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Ghost
Ghost

சில ஆவிகளுக்கு பேசும் திறன் இருக்கலாம். சில ஆவிகள் தாங்கள் அங்கு இருப்பதை தொடு உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும். இப்படித்தான் அது மனிதர்களோடு பேச விரும்புகிறது. மனிதனாக இருந்தபோது எத்தகைய குணங்கள் அவர்களுக்கு இருந்ததோ அதே குணங்கள் தான் பேய்களான பின்னும் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

 

இந்தப் பேய்களை நிறைய பேர் படப்பதிவு செய்து இருக்கிறார்கள். அவற்றில் கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் மட்டுமே அவை தென்படும். மேலும் அசையாமல் இருக்கும் இல்லையென்றால் நகரக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும்.

Ghost
Ghost

இத்தகைய பேய்களை நீங்கள் கல்லறைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காணலாம். சில பேய்கள் உங்களை ஈர்ப்பதற்காக கூச்சல் போடும். இதன் மூலம் அது சுற்றுப்புறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உங்களது கவனத்தை ஈர்க்கும். மேலும் இவை திகிலூட்ட கதவுகளை தட்டுவது, ஜன்னல்களை அடைப்பது, விளக்குகளை அணைப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடும்.

 

இச்செயல்கள் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. மனிதனின் கவனத்தை ஈர்க்க சில சமயம் இது ஆபத்தான செயல்களாக மாறக்கூடிய வகையிலும் இருக்கலாம். சில நேரங்களில் அதிக நேரத்தையும் இது எடுத்துக் கொள்ளும்.

 

உருவம் இல்லாத இந்த பேய்களை பற்றி நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் இவை பந்து வடிவத்தில் ஒளி ஊடுருவக் கூடிய அல்லது ஒளி கசியும் துகள்களாக இருக்கும். எனவே அவற்றை புகைப்படங்களாக எடுக்கும் போது பலரும் வியந்து இருக்கிறார்கள்.