“கிரேக்க ஜென்ரல் செலூகஸ்” – படையை திணறடித்த சந்திரகுப்தன்..
மெசபடோனிய ஆட்சியாளர்களை வீழ்த்தி அலெக்சாண்டருக்கு வடக்கே தண்ணி காட்டிய சந்திரகுப்த மௌரியர் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மௌரிய பேரரசின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று தான் கூற வேண்டும்.
மௌரிய பேரரசின் காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், விவசாயம், பொருளாதாரம் அனைத்தும் செழித்தது என்று கூறலாம். வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டமாக இந்த மௌரிய பேரரசின் காலகட்டத்தை நாம் கூற முடியும்.
மௌரிய பேரரசானது அஸ்ஸாம் மற்றும் இமய மலைகளின் வடக்கே அதன் எல்லைகளைக் கொண்டிருந்தது. மேலும் இன்றைய பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான், ஹெராத் மற்றும் காந்தகஹார் மாநிலங்கள் உட்பட்ட ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது.
கிமு 322 முதல் 185 வரை மௌரிய வம்சத்தார் இந்தியாவில் சிறப்பான அரசியல் மற்றும் ராணுவ ரீதியான ஆட்சி முறையை மேற்கொண்டார்கள். இவர்களின் தலைநகராக பாடலிபுத்திரம் திகழ்ந்தது. இந்த பாடலிபுத்திரம் தான் தற்போது பாட்னா என்று அழைக்கப்படுகிறது.
இந்த வம்சத்தில் சந்திரகுப்த மவுரியா நந்த வம்சத்தை அழித்த பிறகு இந்த பேரரசை நிறுவிய முதல் அரசர் ஆவார். 24 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய சந்திரகுப்தருக்கு பிறகு கிமு 298ல் இவரது மகனான பிந்துசாரா பதவியேற்றார்.
சமண மதத்தை தழுவிய சந்திரகுப்த மௌரியர் அவரது சமூகம் முழுவதும் இறையியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். அது போலவே அசோகரும் பௌத்தத்தை தழுவிய பிறகு அந்தக் கொள்கைகளில் பரப்ப அவர்கள் துணையாக இருந்தார்கள்.
இவர்களது மந்திரி சபைகள் தான் கௌடில்ய சாணக்கியர் இருந்தார். இவரால் எழுதப்பட்ட அஷ்ட சாஸ்திரம் இன்றளவும் பேசப்படக்கூடிய நூலாக உள்ளது. மேலும் இந்த நூலில் இல்லாத விஷயமே இல்லை என்று கூறும் அளவுக்கு அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், போர் மற்றும் மதம் சார்ந்த கருத்துக்களை சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார்.
அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்க ஜெனரல் செலூகஸ் தலைமையிலான படையெடுப்பு மிகவும் பிரமாண்ட முறையில் சித்தரிக்கப்பட்ட போதும். அந்தப் படைகளுக்கே தண்ணி காட்டி அவர்களை தோற்கடித்த பெருமை சந்திரகுப்தனுக்கு உண்டு.
சந்திரகுப்தன் இவர்களை தோற்கடிப்பதற்கு முன்பு அந்தப் பகுதிகளை கிரேக்க ஜெனரல்களாக இருந்த யூடெமஸ் மற்றும் பீத்தோன் ஆகியோர் ஆட்சி செய்து வந்தார்கள். சாணக்கியரின் மூளையை பயன்படுத்தி மிகச்சிறந்த போர் யுக்திகளை பயன்படுத்தி அவர்களை வென்றார்.
மௌரிய பேரரசானது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிக பெரியதாக வளர்ந்திருந்தது. இவர்களின் வர்த்தக அமைப்பு முறையானது ஒரு நிலையான பொருளாதாரத்தை உருவாக்க உதவியது.