• July 27, 2024

 “கோவில் கருவறைக்குள் மறைந்திருக்கும் மர்ம சக்தி..!  – இதனால் தான் கோயிலுக்கு போக வேண்டும் என்றார்களா?

  “கோவில் கருவறைக்குள் மறைந்திருக்கும் மர்ம சக்தி..!  – இதனால் தான் கோயிலுக்கு போக வேண்டும் என்றார்களா?

Temple

சிறு கிராமம் என்றாலும் அந்த கிராமத்தில் கூட கோயில் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட அந்த பழமொழியை உறுதியாக்க கூடிய வகையில் கோயில் இல்லாத ஊரே இல்லை என்று கூறலாம்.

அட .. அப்படி அந்த கோவில் இருப்பதால் அந்த பகுதியில் என்ன நன்மைகள் ஏற்படுகிறது. எதற்காக இந்த பழமொழி ஏற்பட்டது என்பது போன்ற சிந்தனைகள் உங்களுக்குள் எழுவது இயற்கை. அந்த வகையில் இது வரை யாரும் சொல்லாத ஆச்சரிய தகவல் அதுவும் கோயில் கருவறை பற்றி பார்க்கலாமா?

Temple
Temple

அணுவுக்கு அணுவாய் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும், கடவுளை கோயில் என்ற ஒரு பகுதியில் கருவறைக்குள் ஸ்தாபிதம் செய்து வழிபடுகின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்து உள்ளது. அதுவும் இந்து சமயத்தில் உருவ வழிபாடுக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமயத்தில் பல கடவுள்கள் வழிபாட்டில் இருந்தாலும், அந்தந்த கடவுளுக்கு கோவில்களை கட்டி அவர்களை கருவறையில் ஸ்தாபிதம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.

அந்த வரிசையில் ஒவ்வொரு கோயிலில் இருக்கக்கூடிய கருவறையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய  கடவுள்களின் உருவத்துக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கக் கூடிய இயந்திரங்கள் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Temple
Temple

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? பொதுவாகவே கடவுள்களின் விக்ரகங்கள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதியில் அதிக அளவு மின்காந்த ஆற்றல் இருக்கும் என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படி அதிக அளவு மின்காந்த சக்தியை கொண்டிருக்கக் கூடிய அந்த இடத்தில் சிலைகளை நிறுவி அந்த காந்த ஆற்றலை ஒட்டுமொத்தமாக அந்த சிலைகள் எடுத்து பக்தர்களுக்கு பிரதிபலித்து அவர்களது மனதையும், உடலில் நேர்மறை ஆற்றலையும் உருவாக்க உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு மேலும் ஆச்சரியம் ஏற்படும்.

இந்த விஷயம் முற்றிலும் உண்மையானது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு ஊரில் இருக்கும் கூடிய பகுதியில் எந்த இடத்தில் அதிக அளவு மின்காந்த சக்தி உள்ளது என்பதை கண்டுபிடித்து அந்த பகுதியில் கோயில்களை நிர்மாணித்து விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வணங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

Temple
Temple

இதனால் தான் எவ்வளவு கஷ்டங்களோடு கோயிலுக்கு சென்றாலும், கடவுளை வழிபட்டு வெளியே வரும் போது உங்களுக்குள் ஓர் புத்துணர்வு ஏற்படுகிறது.மேலும் மனதில் இருக்கும் பாரம் குறைந்து விடுகிறது.

இப்போது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் கட்டிச் சென்ற கோயில்களுக்குள் இருக்கக்கூடிய கருவறையில் இருக்கும் கடவுளின் சக்தி எத்தகையது என்பது தற்போது உங்களுக்கு எளிதாக புரிந்து இருக்கும்.

அதிலும் குறிப்பிட்ட தினங்களில் கோயில்களுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று நீங்கள் வழிபடுவதன் மூலம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தீயவை அனைத்தும் விலக இந்த மின்காந்த அலைகள் பேர் உதவியாக இருக்கும்.