“ரொம்ப ஓவரா பேசுவாரோ..!”- நீளமான நாக்கு உடைய மனிதர்…

Nick Stoeberl
அளவான நாக்கினை உடைய மனிதர்களே மிக அதிக அளவு பேசும் போது மிக நீளமான நாக்குடைய அதிசய மனிதர் எப்படி இருப்பார் என்பதை பற்றிய பதிவினை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உலகின் மிக நீளமான நாக்கின் மூலம் ஆச்சரியப்படுத்தும் மனித நிக் ஸ்டோபெர்ல். இவரின் ஆச்சரியமான நாவின் நீளம் சுமார் 10.1 சென்டி மீட்டர் ஆகும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் செய்த உலகசாதனை மிக நீண்ட நாக்கை காட்டி உண்மையிலேயே அசத்தலையும் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளார்.
இவர் மிகச்சிறந்த கலைஞர் மற்றும் நகைச்சுவை நடிகர் . இவரின் சூப்பர் சைஸ் நாக்கின் முனையில் இருந்து மேல் உதட்டில் நடுப்பகுதிவரை 10.1 சென்டிமீட்டர் நீளமாக நாக்கு அளவிடப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

மேலும் இது புதிய கின்னஸ் சாதனை 2015ஆண்டு புத்தகத்தில் அமைக்கப்பட்ட புதிய பதிவுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.நிக்கின் தந்தை கிஸ்ஸின் மிகப்பெரிய ரசிகர் மற்றும் ஒரு குழந்தையாக நீக் ஜுன் சிம்மனின் பிரபல மற்ற நாக்கு போஸை பின்பற்றுவார்.
முதன்முறையாக முறையாக தனது நாக்கு மற்றவர்களை விட நீளமானது என்பதை உணர்ந்தார். காலையில் என் நாக்கை துலக்குவதற்கு நான் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார் .

2002 முதல் நீண்ட நாக்கு பட்டத்தை வகித்த பிரிட் ஸ்டீபன் டெய்லரின் 9.8 சென்டிமீட்டர் சாதனையை இவரின் நாக்கு முறியடித்து விட்டது என கூறலாம். மேலும் அந்த நாக்கை பார்க்கவே பார்க்கவே மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது அல்லவா.
பொதுவாக நாக்கு நீளமாக இருந்தால் பெரும் தொல்லை ஏற்படும் அதுவும் பேசுகின்ற வார்த்தைகளால் ஒவ்வொரு மனதும் புண்படும் என்று நினைப்பவர்கள் மத்தியில் இவர் நாக்கு நீளத்தின் மூலம் சின்ன சாதனை படைத்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தால் கட்டாயம் மகிழ்ச்சி அடைவார்கள்.