• June 15, 2024

 யார் இந்த தேவதாசிகள்? மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..

  யார் இந்த தேவதாசிகள்? மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..

Devadasi

சர்ச்சைக்கு உரிய வார்த்தையான இந்த தேவதாசி பற்றிய பொருள் இன்றும் பலர் மத்தியில் ஒரு விவாத பொருளாகவே உள்ளது. அப்படிப்பட்ட தேவதாசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? இவர்களின் உண்மையான வரலாறு என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


தேவதாசி என்ற சொல் ஒரு தமிழ் சொல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லானது வடமொழியில் இருந்து பிறந்த சொல் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த முறையானது ஆறாம் நூற்றாண்டில் தான் புழக்கத்தில் இருந்து உள்ளதாக வரலாற்றில் குறிப்புக்கள் உள்ளது.

சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், அதற்கு முந்தைய வேதக காலத்திலும் இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்ததாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்காக தொண்டு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இந்த தேவதாசிகள் ஆலயங்களில் நிகழும் விழா காலங்களில் இசை, நடனம் போன்றவற்றை மேற்கொள்ள கூடிய வகையில் இருந்தவர்கள். எனவே தான் இவர்களை தேவதாசிகள் என்று அழைத்தார்கள். தேவனின் அடிமை என்று இதற்குப் பொருள் ஆகும்.


Devadasi
Devadasi

சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த இந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆண்களின் பாலியல் பொருளாக மாற்றப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்த வார்த்தையை கேட்கும் போதே சிலர் கொந்தளிக்க கூடிய நிலைக்கு கோபம் கொள்வார்கள்.

மேலும் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் நடனக் கலையில் முக்கிய நிலையில் இருந்திருக்கக் கூடிய இந்த பெண்கள் பற்றி சித்தரிக்க கூடிய மிகச்சிறிய வெண்கல சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேதத்தில் நடனமாதுகள் பற்றிய குறிப்புக்கள் கூறப்பட்டுள்ளது. அத்தோடு உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் நேர்த்தியான முறையில் வருணித்துள்ளது.

இந்த தேவதாசி என்ற சொல் ஆனது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும் கொங்கனியில் நாயகி என்றும் மராட்டியத்தில் பாசவி என்றும் கர்நாடகாவில் சூலி, சானி எனவும் ஒடிசாவில் மக எனவும் உத்தரப்பிரதேசத்தில் பாலினி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.


சங்க இலக்கியங்களில் இவர்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று  கூறி இருக்கிறார்கள். வைணவ மதங்களில் உள்ள ஆகமங்களின் இந்த பெண்களை ருத்ர கன்னிகள் என்று கூறுகிறார்கள்.

இவர்கள் மனதாலும் உடலாலும் தூய்மையானவர்கள் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய இந்த தேவதாசிகளை சைவ சமயக்குறவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் போற்றிப் பாடி இருக்கிறார்.

Devadasi
Devadasi

அது மட்டுமா? சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்களில் கூட செய்திகள் கூறப்பட்டுள்ளது. எனவே தேவதாசிகள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதற்கு இதைவிட மிக நல்ல உதாரணத்தை நாம் கூற முடியாது.


தேவதாசிகளில் இரண்டு வகை காணப்படுகிறது. அதில் முதல் வகை யாரையும் கணவனாக ஏற்காமல் இறைவனை மட்டுமே நினைத்து வாழ்பவர்கள் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பெயர் உண்டு. இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் ருத்ர கன்னிகள். இவர்கள் கோவில்களில் நடனம் ஆடி தனக்கு மனதுக்கு பிடித்த ஒருவரோடு இல்லறம் நடத்துவார்கள்.

மிகவும் ஒழுக்கமான முறையில் இவர்கள் வாழ்க்கையை செவ்வனே செய்தவர்கள். ஆனால் பிற்கால சமூகம் இவர்களை வேறு பாதைக்குள் அழைத்துச் சென்றது என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை நாம் தேவதாசி என்று தான் கூறுகிறோம். பல்வேறு ஜாதியை சேர்ந்த பெண்கள் எந்த தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது.


Devadasi
Devadasi

தமிழர்களின் ஆதி சமூகத்தில் பிறந்த மூத்த பெண்ணை கோவிலுக்கு நேர்ந்து விடக்கூடிய பழக்கம் உள்ளது. இந்த பழக்கம் மறவர், வேளாளர், அந்தணர் என ஜாதி வேறுபாடு இல்லாமல் நடந்துள்ளது.

ஆலயங்களில் காலை மாலை உச்சி வேலை பூஜைகளின் சமயத்தில் இறைவன் முன்னிலையில் நடனம் ஆடுவது இவர்களது முக்கிய பணியாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு கடவுளை பள்ளிகளுக்கு எடுத்துச் சொல்லும் செல்லும்போது லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாடுவது முக்கிய கடமையாக இருந்தது.

மேலும் இவர்கள் கோயிலில் இருந்த பூஜை பாத்திரங்களை துலக்குவது, கோவிலை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூஜை செய்யும் நபர்கள் எப்படி கருவறைக்கு சென்று வருகிறார்களோ, அது போலவே தேவதாசிகளும் கருவறைக்குள் சென்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.


இவ்வளவு ஏன் புத்த சமண சமயங்களில் கூட புத்த பள்ளிகளிலும், தேவதாசிகள் பணி புரிந்திருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். புத்தரே தனது இறுதி காலத்தில் அபிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாக பெற்று சங்கம் நிறுவ பயன்படுத்துகிறார்கள் என யுவான் சாங் குறிப்பில் கூறியிருக்கிறார்.

Devadasi
Devadasi

எப்படி இந்த சொல் ஒரு அவமான சின்னமாக சமுதாயத்தில் மாறியது, என்றால் திடீர் என மாறவில்லை என்று தான் கூற வேண்டும். நடனமாடிய பெண்கள் அரசன் முன்னும் நடமாட வேண்டும் என்ற சூழ்நிலை படிப்படியாக உருவாகி, தேவதாசிகளின் சீரழிவுக்கு ஆரம்பமாக இருந்தது.


இந்த சூழ்நிலையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் 1774 இல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்க காசுகளுக்கு வாங்கி திருவிழா காடு கோவிலுக்கு தானம் செய்ததாக கல்வெட்டுகளில் செய்திகள் வந்துள்ளது.

நாளடைவில் அரசர்களும் அவர்களுக்கு கீழ் இருந்த சிற்றரசர்களும், ஜமீன்தார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதனை அடுத்து இவர்களது சூழ்நிலை மோசமாக இவர்கள் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்.மனிதர்களின் வக்கர புத்தியால் தெய்வீகத் தன்மையோடு கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை மிகவும் கீழ்த்தரமாக மாறியதோடு மட்டுமல்லாமல் வயதான தேவதாசிகள் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எனவே தான் இந்த முறையை அடியோடு அழிக்க பலரும் பாடுபட்டு கடைசியில் வெற்றியடைந்தார்கள்.