• December 3, 2024

 “இந்திய லாரிகள் மற்றும் அமெரிக்க லாரிகள் பற்றிய ஒப்பீடு..!” – யாரும் அறிந்திராத சுவாரசிய தகவல்கள்..

  “இந்திய லாரிகள் மற்றும் அமெரிக்க லாரிகள் பற்றிய ஒப்பீடு..!” – யாரும் அறிந்திராத சுவாரசிய தகவல்கள்..

lorry

இன்று உலகம் முழுவதும் மக்களின் தேவைக்காக பல்வேறு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. எனினும் அங்கே இருக்கும் மக்களின் தேவைக்கு ஏற்ப அந்த வாகனங்களின் வடிவமைப்பு உள்ளது என்று உறுதியாக கூறலாம்.

அந்த வகையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படக்கூடிய லாரிகளில் இந்திய நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் லாரிகளுக்கும், அமெரிக்க நாட்டில் இருக்கும் லாரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் படித்த தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே அமெரிக்க நாடுகளில் லாரிகள் மிகப் பெரிய அளவில் இருப்பதோடு சாலையில் அவை செல்லும் போது ஒரு மிகப்பெரிய வடிவத்தில் செல்வது போல இருக்கும். அது மட்டுமல்லாமல் இதன் முன் பகுதி மூக்கு போல தெரிவதோடு என்ஜினை முன்பாகத்தில் கொண்டிருக்கும். அதி வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த லாரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

lorry
lorry

இந்த லாரிகள் அமெரிக்காவில் இருக்கும் மிக நெடிய தூர ஹைவே சாலைகளில் பயணிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லாரிகளை ஓட்டிச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளின் வசதி கருதி அதற்கு ஏற்ப சிறப்பான வகையில் இந்த லாரிகள் இருப்பது இதன் சிறப்பம்சம் என கூறலாம்.

குறிப்பாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் தங்குவதற்கு என இந்த லாரிகள் தனி காபின் வசதி இடம் பெற்று உள்ளது. எனவே இந்த கேபினிலேயே அவர்கள் தங்கி அவர்கள் வாழ்க்கையை நடத்தக்கூடிய வகையில் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

இதே போல ஐரோப்பிய நாடுகளில் உள்ள சாலைகள் மிகவும் குறுகளாக இருப்பதால் லாரிகளின் எஞ்சினிக்கு மேல் ஓட்டுனர்களுக்கு கேபின் அமைக்கப்பட்டிருக்கும். கேபினுக்கு முன் பகுதியில் இடம் இல்லை. மேலும் ஐரோப்பிய லாரிகளின் வீல் பேஸ் நீளம் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் அங்கு பார்க்கிங் வசதி குறைவாக உள்ளது தான், சிறிய அளவான லாரிகளை தான் ஐரோப்பியர்கள் வடிவமைத்து இருக்கிறார்கள்.

lorry
lorry

மேலும் அமெரிக்க, ஐரோப்பா லாரிகளோடு இந்திய லாரிகளை ஒப்பீடு செய்து பார்க்கும் போது நமது லாரிகளின் வடிவமைப்பு முற்றிலும் வேறு மாதிரியாகத்தான் உள்ளது என கூறலாம். இந்தியாவில் அதிக நெருக்கடி கொண்ட குறுகளான சாலைகளில் மிக சீராக செல்லக்கூடிய வகையில் இந்த லாரிகளை வடிவமைத்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் நீண்ட தூரம் பயணம் செல்லக்கூடிய ஓட்டுநர்கள் இந்த லாரிகளிலேயே அவர்களது இரவுகளையும், பகல்களையும் கழிப்பார்கள். மேலும் இந்த லாரியை அவர்கள் தற்காலிக வீடாக பயன்படுத்துவார்கள்.

இதில் உணவினை சமைப்பதற்காகவும், பொருட்களை வைப்பதற்காகவும் லாரிகளில் தங்குவதற்கு என்று ஒரு சிறிய இடவசதியை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். இதன் மூலம் ஒரு சின்ன கிச்சன் யூனிட்டை இவர்கள் லாரிகளில் எப்போதும் நீங்கள் பார்க்கலாம்.

lorry
lorry

இந்தியாவைப் பொறுத்தவரை லாரிகளில் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு எடை கட்டுப்பாடுகள் உள்ளது என்ற காரணத்தினால் லாரி வடிவமைப்பார்கள் அதைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட எடைக்குள் தான் லாரிகளை உற்பத்தி செய்கிறார்கள்.

மேலும் இந்திய ரோடுகளில் அதிக அளவு சரக்குகளை ஏற்றி செல்லக்கூடிய திறன் வாய்ந்ததாக இந்த லாரிகளில் இருக்கின்ற எஞ்சினை கட்டமைத்து இருப்பதோடு எத்தகைய சாலைகளையும் கடக்க கூடிய வகையில் இந்திய லாரிகள் இருக்கும்.

எனினும் வெளிநாட்டு லாரிகளில் இருக்கின்ற சிறப்பு அமைப்புகள் இந்திய லாரிகளில் இல்லை என்றாலும், அதை பொருட்படுத்தாமல் நமது லாரி ஓட்டுநர்கள் எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு மக்கள் சேவை செய்வதை திறமையாக மேற்கொண்டு வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.