• October 3, 2024

புராண காலத்தில் விளையாடப்பட்ட சதுரங்க விளையாட்டு..! – அது தாங்க செஸ்.. ஆடலாமா..

 புராண காலத்தில் விளையாடப்பட்ட சதுரங்க விளையாட்டு..! – அது தாங்க செஸ்.. ஆடலாமா..

chess

நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எண்ணற்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில்  மனிதனுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், மூளையை தூண்டு விடுகின்ற அற்புத ஆற்றல் படைத்த விளையாட்டாக சதுரங்க விளையாட்டு உள்ளது.

இந்த சதுரங்க விளையாட்டு புராண காலத்தில் இருந்தே விளையாடப்பட்டுள்ளது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்திற்கு உள்ளாவீர்கள். சூது ஆட்டம் என்று அழைக்கப்பட்ட தாய கட்ட ஆட்டம் தான் மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களால் விளையாடப்பட்ட விளையாட்டு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

chess
chess

இந்த விளையாட்டில் தாயக்கட்டைகளை உருட்டி சோகிகளை நகர்த்தி கட்டங்களில் வைத்து விளையாடுவதின் மூலம் எண் கணித முறை எளிதில் பயிற்சி ஆனது. இதன் மூலம் கணித திறன் அதிகரிக்க கூடிய சாத்திய கூறுகள் இருந்தது.

அந்த தாயக்கட்டை விளையாட்டின் விதிமுறைகளை பின்பற்றி சற்று மாறுபட்ட வடிவத்தில் செஸ் என்ற விளையாட்டை வெளிநாட்டுக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தார்கள். எனினும் இந்த விளையாட்டிற்கு முன்னோடியாக நமது தாயக்கட்டை கொண்டு விளையாடப்பட்ட சதுரங்க விளையாட்டு இருந்தது என்றால் அது மிகையாகாது.

இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட சோகிகளுக்கு பதிலாக தான் தற்போது ராஜா, ராணி, சேனை, குதிரை யானை போன்ற காய்களைக் கொண்டு செஸ் விளையாட்டு விளையாடப்படுகிறது.

chess
chess

இந்த செஸ் விளையாட்டை விளையாடுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக மூளை திறனை மேம்படுத்தக்கூடிய சக்தி ஏற்படுகிறது. உங்களது மேலாண்மை முறை மேம்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் காய்களை முன்னும் பின்னும் நகர்த்தி யோசித்து விளையாடுவது தான்.

காய்களை நகர்த்த பல விதங்களில் யோசிப்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்க வழி செய்கிறது. நீங்கள் தொடர்ந்து செஸ் விளையாட்டை விளையாடுவதின் மூலம் உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.

chess
chess

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு இந்த விளையாட உதவியாக உள்ளது. மேலும் இந்த விளையாட்டில் திட்டமிடுதல் முக்கியம். அப்போது தான் வெற்றி இலக்கை நோக்கி நாம் நகர முடியும். இது திட்டமிடுதல் பற்றிய விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

எனவே மேற்கூறிய நன்மைகளை கொடுக்கக்கூடிய செஸ் விளையாட்டு, நமது பாரம்பரிய விளையாட்டின் மறு அவதாரம் என்பதை உறுதியாக கூறலாம். நீங்களும் செஸ் விளையாட்டை விளையாடி உங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டு மேற்கூறிய நன்மைகளை பெறுங்கள்.