யார் இந்த பகளா முகி? – இந்த தேவிக்கும் விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்..
பகளா முகி யார்? என்று இன்றும் பல பேருக்கு தெரியாது. இவரின் விசித்திர வரலாற்றை சொல்லும்போது உங்களுக்கு கட்டாயம் வியப்பு ஏற்படும்.இந்த தேவிக்கும் வேதாள விக்ரமாதித்தனுக்கும் என்ன சம்பந்தம்?
இந்து சமயத்தை பொருத்தவரை பலவகையான தெய்வ வழிபாடு பல் வேறு இனங்களின் மத்தியில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பகளா முகி தேவியை பற்றி இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் பகளா முகி என்பதன் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சொல் ஆனது இரு வேறு சொற்களின் இணைப்பாக உள்ளது. அதாவது “பகளா” மற்றும் “முகம்” என்ற இரண்டு சொற்களை தன்னூள் கொண்டுள்ளது.
இந்த சொல்லானது “வல்கா” என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது. இதனுடைய பொருள் கடிவாளம் என்பதாகும். அதாவது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த கூடிய தன்மை கொண்ட முகத்தை உடைய தேவியாக பகளா முகி விளங்குகிறார்.
கொக்கு போன்ற முக அம்சத்தை கொண்டு இருக்கக்கூடிய இந்த தெய்வத்தை, வட பிராந்தியத்தில் நீங்கள் பார்க்க முடியும். இந்த கடவுளை பீதாம்பரி தேவி அல்லது பிரம்மாஸ்திர ரூபிணி என்று வடக்கு பகுதியில் இருப்பவர்கள் வணங்கி வருகிறார்கள்.
மஞ்சள் நிற ஆடையை அணிந்து தங்க உடைகளில் ஜொலிக்கும் பகளா முகி சிம்மாசனமும், மஞ்சள் தாமரையை கையில் கொண்டிருக்கிறாள். மேலும் தனது கைகளில் சில ஆயுதங்களையும் ஏந்தி இருக்கிறார்.
மத்திய பிரதேச பகுதியில் இந்த தேவியை தந்திர, மந்திர சக்தியை உள்ளடக்கிய தெய்வமாக நினைக்கிறார்கள். இதற்கு காரணம் மன்னன் விக்ரமாதித்யன் ஆண்ட இடங்களில் மந்திர, தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக கூறப்படுகிறது.
எப்படி நிறுவப்பட்ட ஆலயங்களில் மன்னன் விக்ரமாதித்தன் பூஜைகளை செய்து தனது சக்தியை அதிகரித்துக் கொண்டதாக செவிவிழி செய்திகள் உள்ளது. அந்த வகையில் அவர் வழிபட்ட தெய்வம் தான் பகளா முகி ஆலயம் ஒன்று மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் நல்கேடா என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.
தாந்த்ரீகத்தை அடிப்படையாகக் கொண்ட மகா வித்ய என்னும் தசா விந்தியா சாதனாவில் 10 தேவி கோயில்கள் உள்ளது. அந்த தேவி கோயில்களில் தாந்த்ரீக பெண் சொரூபங்களே உள்ளது. இதில் கால பைரவர் மட்டும்தான் ஆண் தெய்வமாக இருக்கிறார்.
இந்த 10 கோயில்களில் ஒன்றாக பகளாமுகி தேவி ஆலயமும் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் மிகச் சிறப்பு என்னவென்றால் ஆலயத்தை சுற்றிலும் மயானங்கள் அதுவும் நான்கு பக்கமும் சூழ்ந்துள்ளது. இதுவரை நீங்கள் சென்ற அல்லது கேள்விப்பட்டிருக்கும் எந்த ஒரு ஆலயமும் இப்படி நான்கு புறமும் மயான வெளியில் அமைந்து இருக்காது.
இங்கு தெய்வீகமான ஆத்மாக்கள் மற்றும் பிற ஆத்மாக்கள் உலாவி வரும் என்பது இன்று வரை இருக்கும் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆத்மாக்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் பகளா முகி வைத்திருப்பாள் என்றும் கூறுகிறார்கள்.
இதெல்லாம் உண்மையா? என்ற சிந்தனை உங்களுக்குள் ஓடுவது இயல்புதான். எனினும் பகளாமுகி தேவியின் ஆலயத்தை பற்றி அங்கு இருக்கும் கல்வெட்டில் குறிப்புக்கள் காணப்படுகிறது.இந்த வரலாற்று சான்றானது இந்த ஆலயம் எப்போது கட்டப்பட்டது என்ற விவரத்தை கூறவில்லை.
எனினும் இந்தக் கோயில் பற்றி அங்கு பரவி இருக்கும் செய்திகள் கிராமத்தார் தரும் செய்திகள் அனைத்தும் வாய் மொழியாகவே உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருமே பகளா முகி வம்சத்தவர் என்றே கருதப்படுகிறது.
பகளாமுகி பற்றி கூற வேண்டும் என்றால் சக்தி யுகத்தில் ஒரு மிகப்பெரிய கடல் சீற்றம், பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்துவிடும் நிலைக்குச் செல்ல அதன் கோரத்தாண்டவத்தை பார்த்து மகாவிஷ்ணு சௌராஷ்ட்ராவில் இருந்த ஒரு தனிமையான இடத்திற்கு சென்று இந்த பிரபஞ்சத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்ற தவத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் அவர் நாவியிலிருந்து வெளி வந்த ஜோதி ஆகாயத்தில் இருந்த நட்சத்திரங்களின் ஒளி ஒன்று சேர்ந்து மஞ்சள் நிற ஆடை உடுத்திய ஒரு பெண்ணாக உருவெடுத்தது இவளே பகளாமுகி என்று அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகிறது.
அது மட்டுமல்லாமல் பகளாதேவி விஷ்ணுவிடம் சென்று இந்த இயற்கை சீற்றத்தை அழித்து உலகத்தை காக்க பார்வதி தேவி தன்னை படைத்திருப்பதாக கூறி மாபெரும் பிரளயத்தை தன்னுள் கிரகித்துக் கொண்டாள்.
அதுபோலவே மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் இழந்த நாட்டை மீட்க தான் இருந்த பல்வேறு பகுதிகளில் சக்தி வாய்ந்த தாந்த்ரீக மந்திர ஆலயங்களில் வழிபாடு செய்து வந்தார்கள்.
அந்த சமயத்தில் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி பகளா முகி தேவியை இந்த இடத்தில் தேடி வந்து பாண்டவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
தீய சக்திகளை அடக்கி ஆளக்கூடிய தன்மை கொண்ட பகளாமுகி தர்மத்தை நிலை நாட்ட கூடிய சக்தி கொண்டவள். யுத்தத்தில் வெற்றி பெற்றால் பகளாமுகி தேவகி கோயில் கட்டி சிலையை பிரதிஷ்டி செய்ய கிருஷ்ண பகவான் கூறியதால் இந்த கோவிலை பாண்டவர் சகோதரர்கள் தற்காலிகமாக ஒரு சிறிய வழிபாட்டுத் தலமாக அமைத்து வழிபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பகளா முகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளது. மேலும் மந்திர தந்திர சக்திகளின் தெய்வமாக அவள் திகழ்கிறாள். மேலும் ஒரு அரக்கனின் நாக்கை பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பது போல காட்சி தருகிறாள்.
மூன்று முகங்களைக் கொண்ட பகளா தேவி தீமைகளை அழிக்கக்கூடிய சக்தி பெற்றவள். சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போலவே இவளுக்கும் மூன்று கண்கள் உள்ளது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
மந்திர சக்திகளை தினமும் வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்ட பகளாமுகியின் சக்திகள் அனைத்தும் கருவறையில் அடங்கி உள்ளதாக கூறுகிறார்கள். இந்த சக்திகள் அனைத்தும் அங்கு வந்து செல்லும் அனைவருக்கும் பகளா முகி வணங்குவதாகவும் அவனை எண்ணி அந்த இடத்தில் நின்று வணங்கும்போது அந்த சக்திகளை நமது உடம்பு உட் கிரகித்து கொள்வதாகவும் எந்த தீய சக்தியும் அவர்களை நெருங்காது என்று கூறுகிறார்கள்.
இங்கு இருக்கக்கூடிய பகலா முகி தேவியின் சிலையானது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்களும், வரலாற்று வல்லுனர்களும், கூறி இருக்கிறார்கள். இதனை அடுத்து பாண்டவர்கள் வழிபட்ட எந்த தெய்வம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
பகளா முகியின் மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் எந்த தீய சக்திகளும் அவர்களை நெருங்க முடியாது. நீங்களும் பகளாமுகியின் மந்திரத்தை தினமும் உச்சரித்து அற்புதப் பயனை அடையுங்கள்.
மேலும் விக்ரமாதித்த மன்னன் ஏன் அவ்வளவு தந்திரமான பராக்கிரமிக்க மிக்க மன்னனாக திகழ்ந்தார் என்பதற்கு பகளா முகி தான் காரணம் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.