• September 10, 2024

பண்டமாற்று முறையில் சிறந்து விளங்கிய தமிழர்கள்..!” – எப்படி தெரியுமா?

 பண்டமாற்று முறையில் சிறந்து விளங்கிய தமிழர்கள்..!” – எப்படி தெரியுமா?

commodity-exchange

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் நடக்கும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வெளிநாட்டு வாணிபம் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் பண்டைய தமிழர்கள் திரை கடல் ஓடி திரவியம் தேடி வியாபாரக் கலை செய்திருப்பது பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் பல வகையான பண்டங்களை சுமந்து கடல் கடந்து அயல்நாடு வரை சென்று வியாபாரம் செய்த தமிழர்கள் கடன் சார் வரலாறு சிறப்புமிக்க ஒன்றாக இன்று வரை உள்ளது.

commodity-exchange
commodity-exchange

ஒரு பண்டத்திற்கு மாற்றாக மற்றொரு பொருளை பெறுவதே பண்டம் மாற்றும் முறையின் அடிப்படையாகும். பணம் மற்றும் நாணயம் நடைமுறை வழக்கில் இல்லாத போது இது போன்ற பண்டமாற்று முறையானது நிகழ்ந்துள்ளது.

ஆரம்ப நாட்களில் வேளாண்மையின் மூலம் உருவான பொருட்களை வடிவம் செய்து இருக்கிறார்கள். ஒரு பொருளை பெறுவதற்காக பணத்தை பயன்படுத்தாமல் பொருள்களின் பரிமாற்ற வழி நேரடியாக நடக்கக்கூடிய முறையைத் தான் பண்டம் மாற்று முறை என்று அழைக்கிறார்கள்.

பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இந்த முறையானது வழக்கத்தில் இருந்தது. இன்றும் தமிழ்நாட்டில் சில கிராமங்களில் பணி செய்த வேளாண்மை தொழிலாளர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கப்பட்டு வருகிறது.

commodity-exchange
commodity-exchange

நெல்லுக்கு மாற்றாக உப்பை பண்டம் மாற்றி இருப்பதாக குறுந்தொகை நூல்களில் குறிப்புக்கள் உள்ளது. மேலும் உப்பு உற்பத்தியாகும் இடத்தை உப்பு கழனி என்றே குறித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பை உப்பமுது என்ற பெயரில் அழைத்து இருக்கிறார்கள்.

அதுபோலவே வேட்டை தொழிலை மேற்கொண்டு காடுகளில் வேட்டையாடி மான் இறைச்சியை கொண்டு வருபவர்கள், அந்த மான் இறைச்சியை கொடுத்து விட்டு நெல் பெற்றுக் கொள்வார்கள்.

ஆ நிரைகளை நினைக்கக்கூடிய ஆயக்குல பெண்கள் தயிருக்கு மாற்றாக நெல்லை பெற்றுச் சென்றுள்ளதாக புறநானூறு கூறுகிறது. கள்ளை பண்ட மாற்றாகத் தந்தும் நெல்லை பெற்றுள்ளார் என்பதே அந்த  பாடல் வரிகள் ஆகும்.

மேலும் ஐங்குறுநூலில் பெரும் பயிருக்கு மாற்றாக மீனை பெற்றுள்ளதற்கான குறிப்புகள் காணப்படுகிறது. காவிரி ஆற்றின் மடுவில் பிடித்த வாளை மீனுக்கு மாற்றாக செந்நெல்லை பெற்று என்ற பாடல் வரிகள் இதனை உணர்த்துகிறது.

commodity-exchange
commodity-exchange

இந்த பண்டம் மாற்றும் முறையில் மதுவுக்கு மாற்றாக சில கொடுக்கப்பட்டுள்ளது பற்றிய குறிப்புகள் உள்ளது யானை கொம்பை கொடுத்து கள் வாங்கி குடித்ததாக அகநானூறில் குறிப்புக்கள் உள்ளது மீன் பிடித்த போது கிடைத்த முட்டை கொண்டு கரை வாங்கி குடித்திருக்கிறார்கள்.

அதுபோலவே உ வே சா எழுதிய உரையில் பாலும் உணவும் தானியமும் பண்டமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதியாக தெரிவித்திருக்கிறார். இந்த பண்ட மாற்றமானது பெரும்பாலும் உணவுப்பொருளை மையமாகக் கொண்டே நிகழ்ந்துள்ளது. குறிப்பாக நெல்,மீன், பயிறு போன்றவை இதில் அதிக அளவு இடம் பிடித்து உள்ளது.

பொருட்களின் மதிப்பை உரிமையாளர்கள் மற்றும் வாங்குவோர் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். எனவே அன்றைய தமிழ் சமூகத்தில் பண்டமாற்று முறை  மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று உள்ளது‌.