
Raja Ram Mohan Roy
வரலாற்று ஆசிரியர்களால் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய் பெண் இனத்திற்கு அளப்பரிய சாதனையை செய்து சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை அடியோடு அழித்த பெருமையை பெற்றவர்.
ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்தி இருந்த சமயத்தில் பழமை வாதத்தால், பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவலங்களை அடியோடு அழிக்க புறப்பட்ட மாபெரும் சக்தியாக ராஜாராம் மோகன் ராய் இருந்தார்.

இந்துக்களின் பழமையான சிலை வழிபாடு மற்றும் பழமை வாத பழக்க வழக்கங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து குழந்தை திருமணத்தை தடை செய்ய மிக முக்கியமான நபராக இவர் விளங்கி இருக்கிறார்.
வங்காள ஜமீன்தார் குடும்பத்தில் 1772 ஆண்டு பிறந்த இவர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். தனது வருமானத்தில் இருந்து ஆங்கில அதிகாரிகளுக்கே கடன் கொடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டிய மூளைக்கார நபராக திகழ்ந்தார்.
தன்னுடைய 42 வது வயதில் சமூக சீர்திருத்தத்தில் கவனத்தை செலுத்தினார். இதில் மிக முக்கியமாக பெண்களின் முன்னேற்றத்தை இவர் பெரிதும் விரும்பியதோடு பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சதி எனும் உடன்கட்டை ஏறுதல் கொடுமையை உடைக்க பாடுபட்டார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
குறிப்பாக இளம் வயதில் இவர் கொல்கத்தாவில் இருக்கும் காளி கோயில் அருகே சதி என்ற படித்துறையில் நடந்த பல உடன்கட்டை ஏறும் சம்பவங்களை பார்த்ததால் பாதிப்பில் என்ன செய்வது என்று தெரியாமல் பல நாட்கள் யோசித்து இந்த நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதை அடுத்து இவர் 1818 ஆம் ஆண்டு சதிக்கு எதிராக “A conference between an advocate for, an opponent of the practice of burning windows alive” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டார். அடுத்து இந்த நிகழ்வானது வெளி உலகத்திற்கு வெளிச்சமானது. மேலும் இந்த சதி பற்றிய நிகழ்வு அதன் கொடூரத் தன்மை தெரிய வந்தது.
அதுவரை இந்துக்களின் மத நம்பிக்கைகளில் தலையிட கூடாமல் இருந்த கிழக்கு கிந்திய கம்பெனி அதன் தன்மையில் இருந்து விலகுவதற்கு ராஜா ராம் மோகன் ராயின் பிரச்சாரம் பெரும் பங்கு வகித்தது இல்லை.

இதனை அடுத்து ராஜாராம் மோகன் ராயின் பலத்த குரலில் கிளம்பிய எதிர்ப்பானது பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவின் காதுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு 1829 ஆம் ஆண்டு சதி பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
பெண்களுக்கு உகந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்த ராஜாராம் மோகன் ராயின் கல்லறை இந்தியாவில் அமையாமல் பிரிட்டிஷ் நகரத்தின் மிகப் பழமையான கல்லறை தோட்டமான Arnos vale cemetery என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இதற்குக் காரணம் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்க் கழகம் நடப்பதற்கு முன்பே முகலாய பேரரசு தனது இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

இதனை அடுத்து 1830-ம் ஆண்டு முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அக்பர் ஷா இங்கிலாந்து அரசிடமிருந்து தனக்கு நிதி உதவி பெறுவதற்காக ராஜா ராம் மோகன் ராய் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு தான் இவருக்கு ராஜா என்ற பட்டமும் கிடைத்தது. இதனை அடுத்து ராம் மோகன் ராயாக இருந்தவர் ராஜா ராம் மோகன்ராயாக மாறினார்.
மேலும் இவர் 1832 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தன்னுடைய 61 வயதில் இங்கிலாந்தில் காலமான போது இந்து முறைப்படி அங்கு தகனம் செய்ய முடியாத காரணத்தால் அந்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். எனவே தான் இவரது கல்லறை இந்தியாவில் காணப்படவில்லை என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.