• October 7, 2024

 எதிரிகளை துவம்சம் செய்யும் கருங்காலி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

  எதிரிகளை துவம்சம் செய்யும் கருங்காலி..! – அட இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

karungali

தற்போது மக்கள் மத்தியில் கருங்காலி மாலை பற்றிய விஷயங்கள் பல்வேறு விதத்தில் பரவி வரக்கூடிய வேளையில் கருங்காலி மாலையை அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படுகிறது. உண்மையில் கருங்காலிக்கு சக்தி உள்ளதா? என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கருங்காலி மாலையை பயன்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது. ஆண், பெண் இருவரும் இந்த மாலையை பயன்படுத்தலாமா? கூடாதா? என்று நினைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஆண், பெண் இருவருமே எந்த கருங்காலி மாலையை பயன்படுத்தலாம்.

karungali
karungali

கருங்காலியை மாலையாக மாற்றி உங்கள் கழுத்தில் அணிவதின் மூலம் கண் திருஷ்டியை இது போக்கக்கூடிய சக்தி கொண்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கல் அடிபட்டாலும் கண் அடிப்படக் கூடாது என்பது பழமொழி.

மனிதர்களை அதிகளவு பாதிக்கக்கூடிய கண் திருஷ்டியை எளிதில் போக்கக்கூடிய தன்மை கொண்டது. அது மட்டுமல்லாமல் பொறாமை குணத்தால் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய எதிரிகளின் எண்ணத்தை செயல்பட விடாமல் தடுக்கின்ற சக்தி எந்த கருங்காலி மாலைக்கு உள்ளது.

இந்த கருங்காலி மாலையை நீங்கள் அணிந்து கொள்ளும் போது உங்கள் உடலில் ஏற்படும் நெகட்டிவ் எனர்ஜியை அது பாதுகாத்து, அப்படியே மற்றவர்களுக்கு திருப்பி அடிக்கும் சக்தியை கொண்டு இருக்கிறது.

karungali
karungali

மேலும் உங்கள் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்குள் இருக்கும் பயத்தை வெளியேற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கக்கூடிய சக்தி கொண்டது. இந்த மாலையை உங்கள் கழுத்தில் வெளியில் தெரியும்படி அல்லது உங்கள் உடலோடு தொட்டு உறவாடும் படியோ நீங்கள் போட்டுக் கொள்ளலாம்.

கருங்காலி மாலையை அணிவதன் மூலம் உங்கள் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்படும். ஜீரணக் கோளாறு ஏற்படாது, மாதவிடாய் பிரச்சனையால் சிரமப்படும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

தற்போது இளம் தலைமுறை இடையே பெருகிவரும் மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை பேறு கொடுக்கக்கூடிய தன்மை இந்த கருங்காலி மாலைக்கு உள்ளது. மேலும் உங்கள் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக கூடிய சக்தி இதற்கு உள்ளது.

karungali
karungali

இந்த மாலையை அணிந்திருப்பவர்கள் கட்டாயம் அசைவ உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது. கருங்காலி மாலை மட்டுமல்லாமல் இழிந்த மரத்தின் பட்டை, பிசின், வேர் மருத்துவ குணம் உடையது. துவர்ப்புத் தன்மையோடு இருக்கும். இந்த கருங்காலியானது நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் போன்றவற்றை குறைக்க கூடிய சக்தி படைத்தது.

கருங்காலி மரத்தில் இருந்து பட்டை எடுத்து கஷாயம் வைத்து குடிப்பதின் மூலம் இதய நோய்கள் தீரும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருங்காலி மாலையை நீங்கள் அணிந்து எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.