• December 5, 2024

நாளை ஆடிப்பூரம் 22.07.23..! – அம்மனை எப்படி வழிபட்டு அருளைப் பெறலாமே..

 நாளை ஆடிப்பூரம் 22.07.23..!  – அம்மனை எப்படி வழிபட்டு அருளைப் பெறலாமே..

Aadipooram

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் எந்த ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பாக கோயில்களில் கொண்டாடப்படுவதோடு வீட்டில் இருக்கும் சுமங்கலிகளும் சுமங்கலி பூஜை போன்றவற்றை செய்து அம்மனின் அருளை பெறுவார்கள்

 

அந்த வகையில் அம்மன் அவதரித்த திருநாளாக கருதப்படுகின்ற இந்த ஆடிப்பூரத்தில் நீங்கள் அம்மனை வழிபட்டு உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெறலாம். இந்த ஆடிப்பூரமானது மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்ததாக புராணங்கள் சொல்கிறது. இந்த நிகழ்வினை சிறப்பாக கொண்டாடத்தான் ஆடிப்பூரத்தை மாபெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

Aadipooram
Aadipooram

அது மட்டுமல்லாமல் அம்பிகையை நோக்கி தவம் செய்யக்கூடிய சித்தர்களும் முனிவர்களும் ஆடி போற நாளில் தான் தங்களது தவத்தை துவங்குவார்கள்.

 

இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு சந்தன காப்பு குங்கும காப்பு வளைகாப்பு என பல வகைகளில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள் இந்த திருநாள் நாளை 22.07.23 சனிக்கிழமையன்று வருகிறது.

 

மேலும் நாளை சனிக்கிழமை மாலை 04.02 வரை பூர நட்சத்திரம் உள்ளது காலை 11:34 முதல் மாலை எந்த நேரம் வரை நீங்கள் அம்மனை வழிபட உகந்த காலம் என்று கூறலாம்.

Aadipooram
Aadipooram

இந்த திருநாளில் திருமணமாகாத பெண்கள் சிறந்த கணவனை பெறவும் திருமண ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை வரம் பெறவும் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பலருக்கும் வளையல் வாங்கி கொடுத்தால் விரைவில் அவர்களுக்கு வளைகாப்பும் குழந்தை பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.

இந்த ஆடிப்பூர தினத்தன்று தான் ஸ்ரீரங்கத்தில் இருக்கும், ஸ்ரீரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பரிசாக அனுப்பி வைக்கப்படும். மேலும் நாளைய தினம் அங்கு தேரோட்டம் நடக்க உள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க பெரும் திரளாக கூடி இருக்கிறார்கள்.

Aadipooram
Aadipooram

ஆடிப்பூர தினத்தில் தான் ஆண்டாள் பிறந்ததாக சொல்லப்படுவதால், பிறந்தநாள் பரிசாக ஆண்டுதோறும் இது போன்ற சீர்வரிசையை அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆடிப்பூரத் தினத்தன்று அம்மனின் மனம் உருகி வேண்டுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

 

எனவே மறவாமல் நாளை ஆடிப்பூர திருவிழா அன்று உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் விளக்கினை கட்டாயம் ஏற்றி அம்மனின் அருள் நிறைந்த பாடல்களை பாடி அம்மனின் அருளைப் பெறுங்கள்.