265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்.. டைனோசர்களுக்கு முன்பே வாழ்ந்த உயிரினம்..
டைனோசர்கள் பற்றி உங்களுக்கு அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்த டைனோசர் பற்றி பலவிதமான கருத்துக்கள் உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அதுவும் டைனோசர் தான் இந்த உலகின் பழமையான உயிரினத்தில் முதன்மையாக இருந்தது எனவும், இந்த இனத்தின் அழிவுக்கு பிறகு தான் மனித இனம் தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது.
இதனை அடுத்து இந்த டைனோசர்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய உயிரினம் பூமியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பாம்பஃபோனஸ் பிக்சை (Pampaphoneus bicaci) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம் பூமியில் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினம் எனவும் மிகப்பெரிய அளவில் இதன் உருவம் இருந்ததாக கருதப்படுகிறது.
இதனை அடுத்து இந்த உயிரினம் தென்னாப்பிரிக்க நிலப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை, தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் சுமார் 265 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழமையான பாம்பஃபோனஸ் பிக்சை (Pampaphoneus bicaci) என்ற உயிரினத்தின் புதை படிவங்கள் மற்றும் மண்டை ஓடுகள் தற்போது கிடைத்துள்ளது.
இந்த விஷயத்தை லின்னியன் சொசைட்டியின் விலங்கியல் இதழில் வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களின் கருத்துப்படி இந்த விலங்கினமானது 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா பகுதிகளில் வாழ்ந்து உள்ளதாகவும், மிகவும் ஆபத்தான விலங்காகவும் கருதப்படுகிறது.
மேலும் இந்த புதிய விலங்கின் மண்டையோடு மற்றும் கை, கால் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றின்படி பூமி ஒரு முறை கொடூரமான அழிவை சந்தித்துள்ளது. அப்போது 80 சதவீதமான உயிரினங்கள் அழிந்த சமயத்தில் இந்த உயிரினத்தின் அழிவும் அமைந்திருக்கலாம்.
இந்த அழிவிற்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்குகளை டைனோசிபாலியர்கள் (Dinocephalians) என்று அழைத்து இருக்கிறார்கள். இதில் தாவரத்தை உண்ணக்கூடிய விலங்குகள் மற்றும் மாமிசத்தை உண்ணக்கூடிய விலங்குகளும் அடங்கும்.
தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் இது போன்ற பெரிய உயிரினங்கள் தென் அமெரிக்கா மற்றும் ரஷ்ய பகுதிகளிலும் வாழ்ந்துள்ளது. மேலும் இதரப் பகுதிகளில் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளது.
மேலும் இந்த புதிய உயிரினத்தின் புதை படிவங்களை கொண்டு அதன் உடல் அமைப்பு மற்றும் உணவு முறை போன்றவற்றை கட்டாயம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.