மிரர் ஒர்க் (Mirror Work) செய்யுங்க..! மகத்தான முன்னேற்றத்தை பார்க்கலாம்..
நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் கண்களை உற்று நோக்கியவாறு நாம் எதை சாதிக்க வேண்டுமோ அந்த வாக்கியத்தை தொடர்ந்து உச்சரிப்பதின் விளைவாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம். இந்த முறையைத்தான் மிரர் ஒர்க் என்று கூறுகிறோம்.
நமக்கு நாமே மேற்கொள்கின்ற இந்த பயிற்சியின் மூலம் நாம் வாழ்க்கையில் வெற்றிகளை எளிதில் எட்டிப் பிடிக்க தான் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான். உன்னை நம்பு என்று கூறுவதை நீங்கள் திரும்பத், திரும்ப கண்ணாடி முன்பு நின்று உங்கள் கண்களைப் பார்த்தவாறு திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.
கண்ணாடி முன் நின்று நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று திரும்பத், திரும்ப நீங்கள் உங்களுக்குள் சொல்லும் போது எண்ணற்ற மாற்றங்கள் உங்களுக்குள் ஏற்படும். இதை விரைவில் நீங்கள் உணர்வீர்கள்.
ஆழ் மனதில் இருந்து நம்பிக்கையோடு நீங்கள் கூறும் வார்த்தைகள் நிச்சயமாக உங்கள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து வாழ்க்கையில் வெற்றி அடையக்கூடிய நிலையை உருவாக்கித் தரும்.
இந்த கண்ணாடி பயிற்சி ஆனது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவி செய்வதோடு உங்கள் மனதில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
வாழ்க்கையில் யாரும் உங்களைப் பாராட்டவில்லை என்ற ஏக்கத்தை விடுத்து, உங்களை நீங்களே பாராட்டி ஊக்கப்படுத்துவதின் மூலம் உங்கள் மனதில் புத்துணர்வு ஏற்படுவதோடு, உத்வேகத்தோடு அனைத்தையும் செய்ய முயற்சி செய்வீர்கள். அந்த வகையில் இந்த விதம் உங்கள் வாழ்க்கையில் வசந்தமாக்கும்.
காலையில் எழுந்தவுடன் நீங்கள் கண்ணாடி முன் நின்று இது போல செய்யலாம். இல்லையென்றால் இரவு உறங்குவதற்கு முன்பு இதற்காக ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்கி நான் உன்னை நேசிக்கிறேன். என் மீது எனக்கு உன் நம்பிக்கை இருக்கிறது என்ற சொற்றொடரை குறைந்தது ஐந்து தடவையாவது கூறிப் பாருங்கள். நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
எனவே இந்த கண்ணாடி பயிற்சியை நீங்கள் இடைவிடாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்து பாருங்கள். உங்களுக்குள் கட்டாயம் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை கற்றுக் கொடுப்பதின் மூலம் அவர்கள் வாழ்வும் வசந்தமாக மாறும்.
மேற்கூறிய கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் உங்களது எண்ணங்கள் மற்றும் அபிப்பிராயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.