“சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..!” – பழமொழியின் உண்மையான அர்த்தம்..
பெண்கள் கர்ப்பம் ஆனதை உறுதி செய்ய இன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. இதனை அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற சிந்தனை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு தான்.
கர்ப்ப பரிசோதனை கருவிகள் 1960 க்கு பின்பு தான் சண்டை படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இருந்த பெண்கள் எப்படி தங்கள் கர்ப்பமானதை உறுதி செய்தார்கள் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் உள்ள ஹியூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின் – human chorionic gonadotropin என்ற ஹார்மோனை பரிசோதனை செய்து கண்டறிந்தார்கள்.
இதனை அடுத்து ஆரம்ப காலத்தில் சட்டியில் மண்ணை நிரப்பி அதில் விதைகளை தூவி விடுவார்கள். பின்பு கர்ப்பம் தரித்த பெண்கள் அவர்களது சிறுநீரை அந்த சட்டியில் ஊற்றி விடுவார்கள்.
இந்த விதைகளில் ஏற்படும் முளைப்புத் திறனை வைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? இல்லையா? என்று கண்டுபிடித்து விடுவார்கள். இதனை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி இருப்பதற்கான ஆவணங்கள் உள்ளது.
அந்த வகையில் கருத்தரிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது கோதுமை மற்றும் பார்லி விதைகளில் பல நாட்களுக்கு சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
இதில் பார்லி விதைகள் முதலில் முளைத்தால் அது ஆண் குழந்தை என்றும் கோதுமை விதைகள் முதலில் முளைத்தால் அது பெண் குழந்தை என்றும் இரண்டுமே முளைக்காவிடில் அவர்கள் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அர்த்தம்.
அதுபோலவே கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்ணின் சிறுநீரில் ஒரு ஊசி வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்படும் ஊசியானது சிவப்பு அல்லது கருப்பு நிறத்திற்கு மாறினால் அவர் கர்ப்பம் தரித்திருப்பதாக அர்த்தம்.
விதை சோதனையை எகிப்தியர்கள் பயன்படுத்தி உள்ளதற்கான சான்றுகள் உள்ளது. கருவுற்ற பெண்ணின் சிறுநீரில் எழுவது சதவீதமான விதைகள் முளைக்கலாம் என்ற ஆய்வை இப்போது கோரி இருக்கிறார்கள். மேலும் பால் இனத்திற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.
அதுபோலவே ஆப்பிரிக்க தவளைகளில் பெண்களின் சிறுநீர் செலுத்தப்பட்ட போது பெண் கர்ப்பமாக இருந்தால் தவளை முட்டையிடும் என்ற நம்பிக்கை நிலவியது. இதனை அடுத்த தான் “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” இயன்ற பழமொழி உருவானது. இதை நாம் சோற்றுப் பானையில் இருந்தால்தான் நாம் அகப்பையால் எடுத்து உண்ண முடியும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் இங்கு அகப்பை என்பது உள்ளே இருக்கக்கூடிய கர்ப்பபையை குறிக்கிறது. சட்டியில் போட்ட விதையின் முளைப்பு திறனை பொறுத்து கர்ப்பப்பையில் குழந்தை உருவாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய தான் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற பழமொழியை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே எந்த ஒரு அறிவியலும் வளர்ச்சி அடையாத காலத்தில் நமது முன்னோர்கள் எத்தகைய அருமையான மருத்துவ ஆய்வினை செய்து கர்ப்பத்தை உறுதி செய்து இருக்கிறார்கள் என்ற கருத்தினை அறியும் போது பலருக்கும் வியப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.