• September 12, 2024

“ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணில் பறக்க இருக்கும் வீரர்கள்..!” – மாஸான பிளானில் கலக்கப்போகும் விஞ்ஞானிகள்..

 “ககன்யான் திட்டத்தின் மூலம் விண்ணில் பறக்க இருக்கும் வீரர்கள்..!” – மாஸான பிளானில் கலக்கப்போகும் விஞ்ஞானிகள்..

Gaganyaan

தற்போது இந்தியா விண்வெளி துறையில் மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு இஸ்ரோ பக்கபலமாக இருப்பதோடு பலவிதமான திட்டங்களையும் தீட்டி அதில் வெற்றி நடை போட்டு வருகிறது என கூறலாம்.

அந்த வகையில் அண்மையில் நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரன் மூன்று விக்ரம் லாண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பத்திரமாக தரை இறங்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை உலக நாடுகளின் மத்தியில் பறைசாற்றியது.

Gaganyaan
Gaganyaan

இதனை அடுத்து ஆதித்யாவை ஏவி சூரிய கோளினை ஆய்வு செய்யும் பணியையும் இஸ்ரோ மேற்கொண்டு வரும் வேளையில், விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திட்டத்தை தீட்டி வருவதை பலரும் வரவேற்று இருக்கிறார்கள்.

இதனை அடுத்து தொடர்ச்சியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டம் தான் ககன்யான் திட்டம் இந்தத் திட்டத்தில் தற்போது விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகால விண்வெளி வரலாற்றில் இந்தியா சொந்தமாக விண்வெளிக்கு, செயற்கைக்கோளையும் விண் கலன்களையும் அனுப்பி உள்ளதே தவிர மனிதர்களை இன்று வரை அனுப்பவில்லை.

Gaganyaan
Gaganyaan

ஆனால் 1984ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. அப்படி இந்தியா சார்பில் முதல் முதலில் விண்வெளிக்கு பறந்து சென்றவர் தான் ராகேஷ் சர்மா.

மேலும் சோவியத் ரஷ்யா தான் முதல் முதலில் நிலவிற்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் பெண்களை அனுப்பிய பெருமையைக் கொண்டது.

எனவே தற்போது இஸ்ரோ இந்த ஏக்கத்தை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை குறித்து வீடியோ ஒன்று அண்மையில் வெளி வந்தது. இந்த திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

சோசியல் மீடியாவில் பரவி இருக்கும் இந்த வீடியோவானதே விமான படையைச் சேர்ந்த வீரர்களா? என்ற கருத்தை எழுப்பி இருப்பதோடு இது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.