• May 9, 2024

மகாளய அமாவாசை தினத்தில் ஐந்து காய்கறிகளை சாப்பிட்டால் முன்னோர்கள் ஆசி கிடைக்குமா? – சாஸ்திரம் என்ன சொல்கிறது..

 மகாளய அமாவாசை தினத்தில் ஐந்து காய்கறிகளை சாப்பிட்டால் முன்னோர்கள் ஆசி கிடைக்குமா? – சாஸ்திரம் என்ன சொல்கிறது..

Mahalaya Amavasai

பொதுவாகவே அமாவாசை என்பது மிக முக்கியமான தினமாக இந்துக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது இந்த தினத்தில் அம்மன் வழிபாடு மட்டுமல்லாமல் முன்னோர்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.


மேலும் அமாவாசை தினங்களில் மூர்க்க தெய்வமாக கருதப்படக் கூடிய சில தெய்வங்களின் சக்தி பன்மடங்கு அதிகரித்து இருக்கும் என்பது இன்று வரை இருக்கும் நம்பிக்கையாக உள்ளது.

Mahalaya Amavasai
Mahalaya Amavasai

எனவே இன்று வரை அமாவாசை தினத்தில் தெய்வ வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் அன்று தங்கள் பணிக்கு விடுப்பு கொடுத்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகின்ற மகாளய அம்மாவாசை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


சர்வ பித்ரு அமாவாசை என்று அழைக்கப்படக்கூடிய மகாளய பட்சம் தொடங்கக்கூடிய காலகட்டத்தில் நீங்கள் உங்கள் முன்னோர்களை மகிழ்விக்கவும் அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் சாபத்தில் இருந்து தப்பிக்கவும் மகாளய பட்சத்தின் போது உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்தாலே போதும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

இந்த ஐந்து காய்கறிகளையும் நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் முன்னோர்களை நினைத்து ஒரு பிடி காக்கைக்கு  வைத்து அதன்பின் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பித்ரு சாபம் விலகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

Mahalaya Amavasai
Mahalaya Amavasai

இந்த மகாளய பட்சத்தின் போது நீங்கள் மென்மையான காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுவது மிகவும் சிறப்பானது என்று கூறியிருக்கிறார்கள். எனவே நீங்கள் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதாவது சமைக்கும் போது தண்ணீரை வெளியேற்றக்கூடிய காய்களை நீங்கள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக எந்த தினத்தில் சுரைக்காய், கீரை போன்றவற்றை நீங்கள் அறவே தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது.

அது மட்டுமல்லாமல் இந்த நாட்களில் நீங்கள் பாகற்காயை அறவே சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த நாட்களில் நீங்கள் மசாலா பொருட்கள் பயன்படுத்துவதை மறந்து விடுங்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது அது உங்கள் முன்னோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.


இந்த நாட்களில் நீங்கள் வாழைக்காய், சேம்பு,சேணை போன்றவற்றை அவசியம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த தினத்தில் நீங்கள் உங்கள் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

Mahalaya Amavasai
Mahalaya Amavasai

அது மட்டுமல்லாமல் நீங்கள் வெண்டைக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பூசணி மற்றும் முள்ளங்கியை சாப்பிட வேண்டும். அவற்றை உட்கொள்வதால் உங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதிலும் என்னை குறைவாக நீங்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

மேலும் இந்த தினத்தில் நீங்கள் உங்கள் வீட்டுத் தொடர் பற்றி ஒரு முறை மட்டும் பயன்படுத்துவது சிறப்பானது. அதற்கு மேல் பயன்படுத்துவதால் தரித்திரம் ஏற்படும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே சுத்தம் செய்ய நீங்கள் ஒரு துணியைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். பலமுறை துடைப்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


எனவே இந்த அமாவாசை தினத்தில் நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு இந்த காய்களை கொண்டு சமைத்த உணவைப் படைத்து பித்ரு சாபத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கட்டாயம் பிதுர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.