ரமண மகரிஷியின் மரண பயத்தை நீக்கிய பாதாள லிங்கம்..! – ஓர் அலசல்..!
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது என்பது பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று அனைவரும் நினைத்திருக்கிறார்கள்.
பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதின் மூலம் நேர்மறை ஆற்றல், நல்ல எண்ணங்கள் மனிதன் இடையே அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மனது தொடர்புடைய சந்திர பகவான், பௌர்ணமி தினத்தன்று மிகுந்த ஒளியோடு காட்சி அளிப்பதால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய அற்புத கதிர்கள் நமது மேனியில் படும்போது நமது மனம் தூய்மை அடைவதோடு மட்டுமல்லாமல் புத்துணர்வோடு இருப்பதற்கும் வழி செய்கிறது என்ற அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை கோயில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை நீங்கள் பார்க்கலாம். இந்த ஆலயத்தை பொருத்தவரை மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளது. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லிங்கங்களின் பின்னணியில் மிகச் சிறப்பான கதைகள் உள்ளது. மேலும் நீங்கள் இந்த கோயில்களின் ராஜகோபுரத்தை கடந்து வரும் போது நீங்கள் பாதாளத்தில் இருக்கும் ஒரு லிங்கத்தை பார்க்கலாம். இந்த லிங்கத்தை தான் பாதாள லிங்கம் என்று கூறுகிறார்கள்.
இந்த பாதாள லிங்கத்தை வணங்குவதின் மூலம் உங்களுக்கு மரண பயம் நீங்கும் என்று அங்குள்ள அனைவரும் கூறி வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ரமணரின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம். ரமணருக்கு மரண பயம் நிலவிய போது இந்த பாதாள லிங்கத்தை தான் வணங்கி தியானம் செய்திருக்கிறார்.
இதனை அடுத்து தான் மரண பயம் நீங்கி ரமணர் அங்கு சமாதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். பாதாள லிங்கமானது ஆயிரம் கால் மண்டபத்தின் கீழ் உள்ளது. பக்தர்கள் இது வேறு ஒரு சித்தரின் சமாதி என்றும் கூறி வருகிறார்கள்.
எனவே திருவண்ணாமலை செல்லக்கூடிய பக்தர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கக்கூடிய இந்த பாதாள லிங்கத்தை மறவாமல் தரிசித்து வாருங்கள். இதன் மூலம் உங்களது மரண பயம் நீங்கி வாழ்க்கையில் புத்துணர்வு உங்களுக்கு கட்டாயம் கிடைக்க செய்யும்.