• June 14, 2024

இன்றைய அறிவியல் மருத்துவத்திற்கே சவால் விட்ட முன்னோர்கள்..! – அன்றே ஸ்டெம் செல் தெரபியை செய்தார்களா?

 இன்றைய அறிவியல் மருத்துவத்திற்கே சவால் விட்ட முன்னோர்கள்..! – அன்றே ஸ்டெம் செல் தெரபியை செய்தார்களா?

stem cell

இன்று மருத்துவத்துறை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கொண்டு உள்ளது. ஒரு மனிதனின் வாழ் நாளை நீட்டிப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அனைவருக்குமே நன்றாக தெரியும்.


அந்த வகையில் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது போன்ற சிகிச்சைகளை சம்பிரதாயம் என்ற பெயரில் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மிகப்பெரிய விஷயம்.

stem cell
stem cell

இந்த சம்பிரதாயங்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் உண்மைகள் பற்றி தெரியாமல் பகுத்தறிவாதிகள் பல வகைகளில் இதனை விமர்சனம் செய்வதை விடுத்து அதில் உள்ள அறிவியல் உண்மையை உணர்ந்து கொண்டால் நிச்சயமாக நன்மை அடையலாம்.


அதற்கு உதாரணமாக சில விளக்கங்களை பார்க்கலாம். அந்த வரிசையில் முதலாவதாக வருவது குழந்தை தாயின் கருவறையில்  பனிக்குடத்தில் எவ்வாறு மிதந்த நிலையில் பத்து மாதம் இருந்ததோ அதே நிலையை அந்தக் குழந்தைக்கு பூமியில் வந்த பிறகும் எந்தவொரு சங்கடமின்றி அது மிதக்கும் நிலையோடு தன் தாயின் கருவறையில் இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு செயற்கையாக அளிக்க தான் இடம் தான் தொட்டிலில் போடும் சம்பிரதாய சடங்கு. 

குழந்தைக்கு எந்தவொரு சங்கடமின்றி இன்றும் பல வீடுகளில் இது தொடர் கதையாய் நடக்கிறது. இதனை நம்புவதற்கு உங்கள் மனம் தயங்குகிறதா? நினைத்துப் பாருங்கள். இன்று ஸ்டெம்செல் என்று சொல்லப்படக்கூடிய தொப்புள் கொடியை சேகரிக்க கூடிய பழக்கம் யார் மூலம் தோன்றியது?   தொட்டிலில் குழந்தையை போடும் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெள்ளி தாயத்தில் அடைத்து  இடுப்பில் கட்டி  போடுவார்கள். 

stem cell
stem cell

குழந்தைக்கு தீராத நோய் ஏற்படும் போது அந்த தொப்புள் கொடியின் ஒரு பகுதியை எடுத்து சிறிது பொடித்து தேனில் கலந்து கொடுத்து காத்த மருத்துவம் எங்கிருந்து பிறந்தது? நம் தமிழ் இனத்திடம் இருந்து தான். எனவே முட்டாள் அல்ல நம் முன்னோர்கள். அதுமட்டுமின்றி தொப்புள் கொடியின் சிறு பகுதியை பெற்று கருத்தரிக்காதவர்கள் வாழைப்பழத்தில் வைத்து விழுங்கிவிட்டால் அதன் பிறகு அவர்கள் கருவுற்று மகப்பேறு அடைவர் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. 

நவீன சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல் ஆய்வினை மேற்கொண்டு உயிரணுக்களை உருவாக்க முடியும் என அன்றே உணர்த்தியவன் தமிழன்.


தாயின் வாசம் தூங்கும்போதும் வீசவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சடங்கு சம்பிரதாயம். தொட்டில் இட்ட பின் பெயர் சூட்டுதல் நிகழ்வு நடைபெறும்.தங்களின் குலதெய்வ பெயரோ அல்லது தாத்தா, தாத்தாவின் தாத்தா பெயரை சூட்டுவது இன்று வரை வழக்கமாக உள்ளது.இது போன்று நிறைய விஷயங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.