“உங்கள் வெற்றியை உறுதி செய்ய உங்களுக்கு..!” – உதவும் சில குணங்கள்..
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டு, அதை அடைய பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படி முயற்சிகளில் ஈடுபட்டும் சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் வகுத்த திட்டங்களில் சரியான நிலைப்பாடு இல்லாமல் இருப்பதும், அவர்கள் தேர்ந்தெடுத்த வழிகளில் சில தடுமாற்றங்களும் இருப்பதால் தான் வெற்றி கிடைக்காமல் இருக்கும்.
எனவே உங்களது லட்சிய இலக்குகளை அடைய கட்டாய வெற்றி அதில் கிடைக்க, உங்களது வெற்றியை உறுதியாக சில குணங்கள் உள்ளது. அந்த குணங்களை நீங்கள் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் உங்களுக்கு நிச்சய வெற்றி கிடைக்கும்.
உங்களிடம் நிறைய பணமும், பதவியும், கல்வியும், திறமையும் இருக்கலாம். ஆனால் உங்களிடம் தன்னடக்கம் இல்லாமல் இருந்தால் இவையெல்லாம் வீணாக போய்விடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதல் படியாக தன்னடக்கம் தேவை என்பதை உணருங்கள்.
எந்த செயலிலும் உங்களிடம் காணப்படும் உறுதியற்ற தன்மை, உங்கள் பண்பை கெடுக்கும். எனவே எப்போதும் மனோதிடத்தோடு, உறுதியாக சிந்திக்கவும், செயல்படவும் நீங்கள் பழகிக் கொள்வது அவசியம். எப்போதும் மனோதிடத்தோடு இருக்கும் குணம் உங்களுக்கு அவசியம் வெற்றியைப் பெற்றுத் தர உறுதுணையாக இருக்கும்.
எந்தச் செயலையும் நாளைக்கு என்று தள்ளி போடாமல் எடுத்த காரியத்தை இன்றே செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்தால் கட்டாயம் வெற்றியை நீங்கள் எளிதில் அடைந்து விடலாம்.
மற்றவர்கள் பொருட்களை பார்த்து ஆசைப்படுவதும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என பேராசை கொள்வதும், மன அமைதியை சீர்குழைக்கும் என்பதால் பேராசையை விடுத்து உங்கள் தேவைக்கு ஏற்ப ஆசைப்படுங்கள். நிறைந்த மனதோடு மன நிறைவோடு, அமைதியாக இருக்கும் குண நலன் உங்கள் வெற்றி இலக்கை தீர்மானிக்கும்.
நீங்கள் தன்னம்பிக்கையோடு இருந்தால் மட்டும் போதாது. அந்த தன்னம்பிக்கையில் சாமர்த்தியமும் இருக்க வேண்டும். அப்படி சாமர்த்தியம் மற்றும் தைரியம் இவை இரண்டும் இருக்கும் பட்சத்தில், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து வெற்றி முனையை எளிதில் அடைய உதவி செய்யும்.
உங்களுக்குள் மண்டி கிடக்கும் பொறாமையும் வெறுப்பையும் நீங்கள் அழித்து விடுங்கள். தியாக உணர்வு இருக்கும்போது இந்த இரண்டும் அழிந்து போகும். வீட்டிற்கு வெளியேயும் வீட்டிற்கு உள்ளேயும் தொண்டு உள்ளத்தோடு செயல்படக்கூடிய மனப்பக்குவத்தோடு இருங்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் சகிப்புத்தன்மையோடு இருந்தால் மிக சீக்கிரமே உங்களுக்கு வெற்றிகளை அடையக்கூடிய தன்மை ஏற்படும். உங்களுக்குள் இருக்கும் கிளர்ச்சி, கலவரம், கொந்தளிப்பு போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இதனை செய்வதால் வெற்றி எளிமையாக வந்து சேரும்.
எப்போதும் சோம்பலோடும், சோர்வோடும் இருக்க வேண்டாம். உங்களை சுறுசுறுப்பாகவும், அகமலர்ச்சியோடும் வைத்துக் கொள்வதின் மூலம் உங்கள் வெற்றிக்கு இது பாலமாக இருக்கும்.
எதைப் பற்றியும் சந்தேகப்பட வேண்டாம். அப்படி சந்தேகம் ஏற்பட்டால் அது உங்கள் அமைதியையும் உறவையும் கெடுத்துவிடும். எனவே நம்பிக்கையோடு இருங்கள். அந்த நம்பிக்கை தான் கெட்டவனையும் நல்லவனாகும். உங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதின் மூலம் வெற்றி தூரத்தை வெகு எளிதில் அடைக்கலாம்.
தீய எண்ணங்களை உங்கள் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். ஆசையும், கோபமும் கொள்ளாமல் எதையும் அமைதியோடு பார்க்கக்கூடிய பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். மேலும் தீய எண்ணங்கள் உங்கள் வலிமையையும், உடல் பொலிவையும் கெடுத்துவிடும்.
எனவே மேற்கூறிய குண நலன்களை உங்களிடம் அதிகரித்துக் கொள்வதின் மூலம், எளிதில் வெற்றி பாதையில் நீங்கள் பயணம் செய்து வெற்றி இலக்கை எளிதில் அடைந்து விடலாம்.