• July 27, 2024

நிலவையும், பூமியும் செல்பி எடுத்த ஆதித்யா  L1..!” – விண்வெளியில் வீறு நடை போடும் பாரதம்..

 நிலவையும், பூமியும் செல்பி எடுத்த ஆதித்யா  L1..!” – விண்வெளியில் வீறு நடை போடும் பாரதம்..

Aditya L1

செப்டம்பர் இரண்டாம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆதித்யா L1 ஏவப்பட்டது. 

இந்த விண்கலம் ஆனது சூரியனின் ஏற்படும் சூரிய வெடிப்பு பற்றிய நிகழ்வுகளை ஆய்வு செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதித்யா LA விண்கலம் அதன் இலக்கான லாக்ரேஞ்சு பாயின்ட் 1-க்கு தனது பயணத்தை தொடர்ந்தது.

Aditya L1
Aditya L1

சந்திரயான் 3 வெற்றியை அடுத்து சூரியனை நோக்கி நமது பயணம் தற்போது விஸ்தரித்து உள்ளது. இது சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் கரோனா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கண்காணிக்க வடிவமைக்கப்பட்டதாகும். இது L1 சுற்றியுள்ள ஒளிபட்ட பாதையில் உள்ள காந்தப்புலமையின் மாறுபாட்டை கணக்கிடக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது.

சூரிய வெடிப்புகளில் நிகழக்கூடிய நிகழ்வுகளையும், அவற்றின் தாக்கத்தையும் நமக்கு விரிவாக எடுத்து அனுப்பக்கூடிய ஆதித்யா L1 பூமியில் இருந்து சூரியனின் திசையில் சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் L18 ஒரு ஒளிவட்ட பாதையில் வைக்கப்படும்.

இதன் மூலம் இந்த விண்கலத்தை மற்ற கிரகணங்களின் மறைவுகளில் இடையூறு இல்லாமல் தொடர்ந்து சூரியனை கண்காணிக்க முடியும்.

Aditya L1
Aditya L1

இந்த சூழ்நிலையில் ஆதித்யா L1 ஒரு நாளைக்கு 1440 படங்களை தரை நிலையத்திற்கு அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை கொண்டு சூரியனின் பண்புகள் மற்றும் அதில் இருக்கக்கூடிய கோடுகளை நாம் மிகச் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும்.

இதனை அடுத்து ஆதித்யா L1 சமீபத்தில் எடுத்த பூமி மற்றும் சந்திரனின் படங்களை விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆய்வாளர்கள் பார்த்து ஆச்சரியத்தை அடைந்திருக்கிறார்கள். மேலும் L1 புள்ளியை நோக்கி விண்கலம் தனது பயணத்தில் தொடங்கும் போது இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இது உருவாக்கி தரும்.

Aditya L1
Aditya L1

அந்த வகையில் தற்போது ஆதித்யா L1 எடுத்து அனுப்பி இருக்கும் நிலவு மற்றும் பூமியின் செல்பிகளை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள். 

இனி வரும் நாட்களில் இது போன்ற பல புகைப்படங்களை எடுத்து அனுப்புவதின் மூலம் விஞ்ஞானிகளின் தேடல்களுக்கு இது சரியான விடையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள்.

நிலவில் சாதித்தது போலவே, சூரியனிலும் அளப்பரிய கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் சொல்லி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.