எது முதலில் சந்திரயான் 3 ஆனா? இல்லை லூனா 25? – கடுமையான போட்டா போட்டி..
இந்தியா அண்மையில் செலுத்திய சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25, இந்த இரண்டு விண்கலங்களில் எது முதலில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும், பணியை மேற்கொள்ளும் என்ற கடுமையான போட்டா போட்டி நிலவு வருவதை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கடந்த 11ம் தேதி ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுப்பாதைக்கு சென்றது. அது போலவே இஸ்ரோவால் சுமார் 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாம் ஏவுதளத்தில் மூலம் ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நிலவில் வெற்றிகரமாக அதன் சுற்றுப் பாதையை நெருங்கிய சந்திரயான் 3 வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் அதனுடைய சாப் லேண்டிங் முறையில் தரை இறங்க உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இது வரை நிலவின் தென் துருவத்தை எந்த ஒரு நாட்டின் விண்கலமும் ஆய்வு செய்யவில்லை என்பதுதான். இதற்கு போட்டியாக லூனா 25 யை ரஷ்யா விண்ணில் ஏவியது.
ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் நிலவில் ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலத்தை செலுத்தியது. மேலும் இந்த விண்கலமானது வரும் 21ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கக்கூடிய வடிவில் ரஷ்ய விஞ்ஞானிகள் இதை வடிவமைத்து இருக்கிறார்கள்.
இந்திய விண்கலமானது 23ஆம் தேதி நிலவில் இறங்கும் நாளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ரஷ்யா தன் விண்கலத்தை தரை இறக்க உள்ள நிலையில் உலக அளவில் இது பற்றிய கருத்துக்கள் பெருமளவு ஏற்பட்டுள்ளதோடு, அதீத கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது என கூறலாம்.
இதனை அடுத்து இந்த இரண்டு விண்கலங்களும் தென் பகுதியில் ஆய்வு செய்ய உள்ள நிலையில் இந்த விண்கலம் முக்கியமான தகவல்களை அனுப்பும் என்பதை அறிந்து கொள்ள உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.
மேலும் நிலவு பற்றிய புதிய தகவல்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், விரைவில் நிலவில் குடியேறி வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என்பதும் நமக்கு விரைவில் தெரியவரும்.
இந்த இரண்டு விண்கலங்களும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அதன் பணியை சீரும் சிறப்புமாக செய்து அந்தந்த நாடுகளுக்கு நற்பெயரை பெற்றுத் தருமா? என்பதை அது தரை இறங்க கூடிய நாட்களை பொறுத்து அமையும் என்று கூறலாம்.
இந்திய வரலாற்றிலேயே அதிக அளவு பொருட்சளவில் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய நமது சந்திரயான் 3 மற்றும் விக்ரம் லேண்டெர் சீரிய முறையில் செயல்பட்டு வெற்றியை குவிக்க வேண்டும் என்று பலரும் கனவு காண்பது நிச்சயம் பலிக்கும் என்று நம்பலாம்.