• September 10, 2024

 “ஈஸ்டர் தீவு சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும்..!” – இப்படி ஒரு தொடர்பா? மலைக்க வைக்கும் மர்மம்..

  “ஈஸ்டர் தீவு சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும்..!” – இப்படி ஒரு தொடர்பா? மலைக்க வைக்கும் மர்மம்..

Easter Island

விஞ்ஞானம் தன்னை மிஞ்சி வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், பண்டைய காலங்களில் பிரமிக்க தக்க வகையில் யாரும் செய்ய முடியாத பல அரிய சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்களை கட்டியது அல்லது கட்ட உதவியது வேற்று கிரக வாசிகளாக விளங்கும் ஏலியன்களாக இருக்கலாம் என்ற கருத்து தற்போது ஆழமாக உருவாக்கி உள்ளது.

அந்த வகையில் 5 முதல் 33 அடி வரை இருக்கும் சிலைகள் அதிகபட்சமாக 80 டன் எடையோடு உள்ளது. இந்தச் சிலைகளை நடக்கும் சிலைகள் என்ற பெயரில் அழைத்து வருகிறார்கள்.

Easter Island
Easter Island

இத்தகைய சிறப்புமிக்க சிலைகள் அனைத்தும் ஈஸ்டர் தீவில், அதாவது பசுபிக் கடலில் இருக்கக்கூடிய இந்த தீவில் உள்ளது. மேலும் இங்கு இருக்கக்கூடிய உலக புகழ்பெற்ற ஒற்றை கல் மனித சிலைகள் பார்ப்பதற்கு பிரம்மிப்பை ஏற்படுத்தக்கூடிய வகைகள் உள்ளது.

“ராபா நுய்” என்று இங்கு இருக்கக்கூடிய உள்ளூர் பொதுமக்களால் அழைக்கக்கூடிய இந்த இடத்தில் மோவாய் சிலைகள் அதிக அளவு உள்ளது. இந்த சிலைகள் மனித முகத்தை போன்ற அமைப்போடு நிமிர்ந்து நிற்கக்கூடிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 33 அடி வரை உயரத்தோடு இந்த சிலைகள் அமைந்து உள்ளது.

இந்த சிலைகளை உள்ளூர்வாசிகள் அனைவரும் தங்களது தெய்வமாக கருதி வருவதோடு, அச்சிலைகளை முன்னோர்களாக சித்தரிக்கிறார்கள். மேலும் சுமார் 900 பெரிய மனித தலைகள் கொண்ட சிலைகள் இந்த தீவு முழுவதும் உள்ளது.

Easter Island
Easter Island

இவ்வளவு பெரிய எடையுடைய சிலைகளை யார் இந்த தீவுப் பகுதிக்கு எடுத்துச் சென்று இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் நேர்த்தியான முறையில் இந்த சிலைகளை யார் உருவாக்கி இருப்பார்கள் என்ற தேடல் இன்று வரை நிலவி வருகிறது.

இதில் குறிப்பிடும் படியான விஷயம் என்னவெனில் எந்த சிலைகளில் பெரும்பாலான சிலைகள் எரிமலை சாம்பலால் உருவாக்கப்பட்டுள்ளது. இது கிபி1250 முதல் 1500

ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிலைகளை செதுக்க குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகி இருக்கும். மேலும் தீவில் ஆறோ, ஏரியோ எதுவும் இல்லாத நிலையில் அங்கு இருக்கும் நன்னீர் ஊற்றுக்களை மட்டும்தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

இந்தச் சிலைகள் பெரும்பாலும் நன்னீர் இருக்கக்கூடிய பகுதிகளில் அதிக அளவு வைத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு சிலையும் தனித்துவமாக இருக்கும்.இது ஒன்றை போல் ஒன்று இருக்காது.

Easter Island
Easter Island

இங்கு காணப்படும் சிலைகள் சேதம் அடைந்து சில பாதி பூமிக்கடியில் புதையுண்டு இருப்பதற்கு காரணம், இருதரப்புக்கும் ஏதேனும் சண்டைகள் அந்த பகுதிகளில் நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எந்த ஓரு நவீன வசதியும் இல்லாத காலகட்டத்தில் எப்படி இத்தகைய அதிக எடை உடைய சிலைகளை நகர்த்தி இருப்பார்கள் என்பது அவிழாத மர்மமாக உள்ளது. எனவே எந்தச் சிலைகளை ஏலியன்கள் தான் இந்தப் பகுதிகளில் வைத்திருக்க வேண்டும் என்று சிலர் வாதாடி வருகிறார்கள்.

இந்த மோவாய் சிலைகளில் ஒன்றான Hoa Hakan anai’ a என்ற சிலையை ரிச்சர்ட் போர்வெல் என்ற ஆங்கிலேய கப்பல் கேப்டன் விக்டோரியா மகாராணிக்கு பரிசளித்தார். அந்த சிலை என்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளது.