• July 27, 2024

என்ன சொல்றீங்க.. திருப்பதி கருவறையில் சிலை இல்லையா? – பரம ரகசியம் என்ன?

 என்ன சொல்றீங்க.. திருப்பதி கருவறையில் சிலை இல்லையா? – பரம ரகசியம் என்ன?

Tirupati

ஏழு மலைகளை கடந்து ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பிரபலங்கள் முதற்கொண்டு சாமானிய மக்கள் வரை பாலாஜியை காணவும், தங்களது மனக்குறைகளை நீக்கக்கூடிய கோரிக்கையை வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

கலியுகத்தில் கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஏழு குண்டல வாசனாக ஸ்ரீ பாலாஜியை சித்தரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், உலகிலேயே ஒரு மிகப்பெரிய பணக்கார தெய்வம் என்றும் கூறும்படி அதிக அளவு வருமானம் பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.

Tirupati
Tirupati

இதனை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியாவில் செல்வ செழிப்பான புனித தலத்தில் ஒன்று. இன்னும் மக்கள் விரும்பிச் சென்று ஏழுமலையானின் அருளை பெறுவதில் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.

எனவே ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசிப்பதின் மூலம் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை தான் திருப்பதிக்குச் சென்றால் திருப்பம் வரும் என்ற சொற்றொடரைக் கொண்டு நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த தெய்வத்தை வழிபடுவதற்கும், பூஜை செய்வதற்கும் உரிய மலர்கள், வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை திருப்பதியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாருக்கும் தெரியாத கிராமத்தில் இருந்து கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த கிராமமானது அவர்களின் சொந்த மக்களை தவிர இதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்று சொல்லலாம்.

Tirupati
Tirupati

அதுமட்டுமல்லாமல் திருப்பதி பாலாஜியின் சிலை கருவறையின் மையத்தில் நின்ற நிலையில் இருப்பதாகத்தான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை சிலையானது சன்னதியின் வலது மூலையில் தான் வைக்கப்பட்டு உள்ளது.

திருப்பதி கோயில் கருவறையில் சுவாமி சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கக் கூடிய மண் விளக்குகள் அணையா விளக்குகளாக, பன்னெடும் காலம் முதற்கொண்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கை யார் ஏற்றினார்கள். இன்று வரை எப்படி அணையாமல் எரிகிறது என்பது பற்றிய உண்மைகள் யாருக்குமே புலன் ஆகவில்லை என்று கூறலாம்.

மேலும் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஒரு பகுதியில் மன்னர் ஒரு கொடூரமான குற்றத்தை செய்த 12 பேருக்கு மரண தண்டனை விதித்ததோடு மரணத்தை தழுவிய அந்த குற்றவாளிகளின் உடலை பாலாஜி கோயிலின் சுவரில் தொங்கவிட, அந்த நேரத்தில் அங்கு தெய்வம் தோன்றியதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் பதிவு இட்டிருக்கிறார்கள்.

Tirupati
Tirupati

அறிவியலுக்கே சவால் விடக்கூடிய ஆச்சரியம் என்னவென்றால் பச்சை கற்பூரத்தை எந்த கல்லில் பூசினாலும், அது விரிசலை ஏற்படுத்தி பிளவுகளை உண்டாக்கும். இது அறிவியல் உண்மை. ஆனால் பாலாஜி சிலையில் இந்த பச்சை கற்பூரத்தை தேய்க்கும்போது எந்தவிதமான கெமிக்கல் ரியாக்ஷனும் ஏற்படவில்லை.இது இன்று வரை இது புரியாத புதிராகவே உள்ளது.

இப்போது கூறுங்கள் திருப்பதி ஏழுமலை சுவாமிகள் சிலை கருவறையில் எந்த பகுதியில் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் திருப்பதி ஏழுமலை சுவாமி பற்றிய ரகசியங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.