என்னடா சொல்றீங்க.. உடல் உறவு முடிந்ததும் ஆண்னை விழுங்கும் பெண் அனகோண்டா..! – அதிர்ச்சி தகவல்..

Anaconda
பாம்பு என்றால் படையை நடுங்கும் என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகைகளில் ஒன்றான அனகோண்டா பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.
பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களுக்குமே பசி, உறக்கம், உடலுறவு போன்ற பொதுவான செயல்பாடுகள் உள்ளது. இதில் உடல் உறவு கொள்ளுதல் முறையில் ஒவ்வொரு உயிரினங்களிடம் வேறுபட்ட பண்புகள் காணப்படுகிறது.

அந்த வகையில் அனகோண்டா வகை பெண் பாம்புகள், உடலுறவு முடிந்த நிலையில் ஆண் பாம்புகளை விழுங்கி விடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மேலும் பெண் அனகோண்டா பாம்புகள் உறக்க நிலையில் இருந்து வெளிவரும் போது அதன் தோலை உரிக்கிறது. இப்படி தோலை உரிக்கும் சமயத்தில் அதன் உடலில் இருந்து ஃபெரோமோன் என்ற ஹார்மோன் வெளி வருகிறது. இந்த ஹார்மோன் வாசனையை நுகரக்கூடிய ஆண் பாம்புகள், பெண் அனகோண்டா பாம்பின் மீது இச்சை ஏற்படுகிறது.
இதனை அடுத்து உடலுறவு கொள்ளுகின்ற பெண் பாம்புகள், ஆண் அனகோண்டாவை விழுங்குகின்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை ஜீசஸ் ரிவாஸ் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார். இவர் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட் பல்கலைக்கழகத்தில் பூச்சியியலாளராக விளங்குகிறார்.

இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் தான் இந்த வினோத அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பாம்புகளின் பாலியல் செயல்பாடுகளை குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட போது பெண் பாம்புகள் இனச் சேர்க்கைக்குப் பிறகு உடலுறவு கொண்ட ஆண் பாம்புகளை நசுக்கி கொன்று விழுங்கி விடும் என்பது தான் அந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு.
பொதுவாகவே எந்த ஒரு உயிரினத்திலும் ஆண்கள் உடலளவில் பெரிதாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது போலவே உடலுறவின் போதும் ஆண் இனம் ஆதிக்கம் செலுத்தும்.
ஆனால்அனகோண்டா இனத்தில் பெண் அனகோண்டா உருவ அமைப்பில் பெரிதாக அதாவது ஆண் பாம்புகளை விட ஐந்து மடங்கு பெரிதாக உள்ளது. மேலும் பெண் பாம்புகள் தான் உடலுறவின் போது ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனை அடுத்து பெண் பாம்புகள் தான் முதலில் இனச்சேர்க்கைக்கு ஆர்வம் காட்டுவதாக அவரது ஆய்வில் தகவல்கள் வெளி வந்து உள்ளது. மேலும் பல ஆண் பாம்புகளோடு தொடர்பில் இந்த பெண் பாம்புகள் இருக்கும், எனினும் ஆண் பாம்பு ஒரே ஒரு பெண்ணிடம் மட்டுமே இன சேர்க்கை செய்வதாக கூறியிருக்கிறார்.
இனச்சேர்க்கைக்குப் பிறகு எல்லா சமயங்களிலும் ஆண் பாம்பை இவை விழுங்குமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சில சமயங்களில் ஆண் பாம்பை விழுங்கும் நிகழ்வு நடக்கிறது. இந்த செயல்பாடானது சில சிலந்திகள் மற்றும் ஆக்டோபஸ்களிலும் காணப்படுகிறது.