• December 3, 2024

“பஞ்சாங்கம் பற்றிய அறிந்திடாத பக்கா செய்திகள்..!”- படிக்கலாம் வாங்க..

 “பஞ்சாங்கம் பற்றிய அறிந்திடாத பக்கா செய்திகள்..!”- படிக்கலாம் வாங்க..

panchāngam

பஞ்சாங்கம் என்ற நூலானது அதிக அளவு பயன்படுத்தக்கூடிய ஜாதக குறிப்பேடு என்று கூறலாம். பஞ்சாங்கம் என்ற பெயரைப் பொருத்தவரை இதில் ஐந்து அங்கங்கள் உள்ளதால் தான் பஞ்சாங்கம் என்ற பெயரை பெற்றது என கூறலாம்.

அது சரி அப்படி அந்த ஐந்து அங்கங்கள் என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். அவை முறையை திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகும்.

panchāngam
panchāngam

இதில் முதலாவதாக வரக்கூடிய திதியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே காணப்படுகின்ற தூரத்தை குறிக்க பயன்படுவதாகும். இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி பற்றிய விடயங்கள் இருப்பதோடு சந்திரன் மற்றும் சூரியன் பௌர்ணமி அன்று 180 டிகிரி வரை விலகி இருக்கக்கூடிய விஷயம் வரை தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் சூரியன் தினமும் 12 டிகிரி வரை விலகிச் செல்லும் நிகழ்வினை பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்தசி, பௌர்ணமி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சந்திரன் தேயக் கூடிய நிகழ்வை கிருஷ்ண பட்சம் என்றும் வளரக்கூடிய நிகழ்வை சுக்கில பட்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக வாரத்தை பொறுத்தவரை ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஏழு நாட்கள் இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

panchāngam
panchāngam

இதனை அடுத்து மூன்றாவதாக 27 நட்சத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான ராசிகள் அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றி ஜோதிட தர்மத்தில் கூறி இருக்கின்ற விதிகளின் அடிப்படையில் வகுத்து இருக்கிறார்கள்.

நான்காவதாக கர்ணம். இந்த கர்ணம் என்பது திதியில் பாதி, அதாவது ஆறு டிகிரியை கொண்டது என கூறலாம். இதில் 11 வகைகள் உள்ளது.

கடைசியாக வருவது யோகம், இதில் இரண்டு வகை யோகங்கள் உள்ளது. முதல் வகை சூரியனும், இரண்டாவது வகை சந்திரனோடும் தொடர்பு கொண்டது. மேலும் இந்த இரண்டு வகை யோகங்கள் 27 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

panchāngam
panchāngam

பஞ்சாங்கத்தை பொறுத்தவரை வாக்கிய முறை பஞ்சாங்கமும், திருக்கணித முறை பஞ்சாங்கமும் பயன்பாட்டில் உள்ளது. வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் சில பிழைகள் இருந்ததால் அவற்றை திருத்தி புதிய முறையை கண்டுபிடித்தார்கள் அதையே திருக்கணித முறை என்று அழைத்திருக்கிறார்கள்.

மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இந்த இரு முறை பஞ்சாங்கங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போது திருக்கணிக பஞ்சாங்கத்தை ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியால் மடத்து பஞ்சாங்கம், ஆனந்த போதினி திருக்கணித பஞ்சாங்கம் பயன்பாட்டில் உள்ளது.